அமைச்சரவை முடிவுகள்

Published By: Vishnu

17 Oct, 2018 | 03:47 PM
image

நேற்று செவ்வாய்க்கிழமை ( 2018.10.16) திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அமைச்சரவையின் தீர்மானங்கள் வருமாறு,

25. சிரேஷ்ட பிரஜைகளுக்கான தேசியக் கொள்கை (நிகழ்ச்சி நிரலில் 69 வது விடயம்)

இலங்கையில் மொத்த மக்கள் தொகையில் 12.4 சதவீதம் அல்லது 2.6 மில்லியன் நபர்கள் 60 வயதுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் அத்தோடு இவர்கள் 2022 ஆம் ஆண்டளவில் இந்த மக்களின் எண்ணிக்கை 16.3 சதவீதமாக அதிகரிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசாங்கத்தினால் சிரேஷ்ட பிரஜைகள்  சேமநலம் மற்றும்  தங்குமிட வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையை மேலும் மேம்படுத்தி சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதார அபிவிருத்தி உரிமைகளைப் பாதுகாப்பதற்காக  தயாரிக்கப்பட்டுள்ள தேசியக் கொள்கைக்கான சம்பந்தர்பட்ட நிறுவனத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்காக சமூக சேமநல மற்றும்  ஆரம்ப கைத்தொழில்துறை அமைச்சர் தயா கமகே அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது.

26. ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப ஆரம்ப செயற்பாட்டை முன்னெடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 71 ஆவது விடயம்)

ஏற்றுமதி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூல உபாயமாக தகவல் தொழில்நுட்ப ஆரம்பததை 2018 தொடக்கம் 2020 உள்ளிட்ட 3 வருட காலத்துக்குள் செயற்படுத்துவதன் மூலம் தகவல் தொழில்நுட்பம் வர்த்தக செயற்பாடு முகாமைத்துவ துறையில் ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களின் வர்த்தக பணிகளை மேம்படுத்துவதற்கு 2018 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழிவு இடம்பெற்றிருந்தது. இதற்கு அமைவாக திட்டமிடப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27. 1998 ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான கிராம வாசனா நிதி சட்டத்தில் திருத்தை மேற்கொள்ளல் (நிகழ்ச்சி நிரலில் 76 ஆவது விடயம்)

இலங்கை பணியாளர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கும் கிரம வாசனா நிதியத்துக்கு பங்களிப்பு செய்யும் கிராம வாசனா அதிர்ஷ்ட லாப சீட்டை மேலும் மேம்படுத்துவதற்காக ஒழுங்குகளை மேற்கொள்ளும் பொருட்டு 1998 ஆம் ஆண்டு  இலக்கம் 12 இன் கீழான கிரம வாசனா நிதி சட்டத்தில் திருத்தை மேற்கொள்வதற்காக  தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர்  பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்காகவும்  தொழில் மற்றும் தொழில் தொடர்புகள் அமைசசர் ரவீந்திர சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

28. கட்டுபொத்த, பமுனாகொட்டுவ, படுவஸ்நுவர நீர் விநியோகத் திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)

குருநாகல் மாவட்டத்தில் வாழும்  சுமார் 1 இலட்சத்து 33 ஆயிரம் மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள  உத்தேச கட்டுபொத்த பமுனுகொட்டுவ, படுகஸ்நுவர நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில்  M/S. Kolon Global Corporation என்ற  நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆலோசனையை பாராட்டுதல் மற்றும் சிபார்சுகளை முன்வைப்பதற்காக  அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்த்தைக் குழு மற்றும் திட்ட குழுவிடம்; சமர்ப்பிப்பதற்காக நகர திட்டமிடல் மற்றும் நீர்வள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆலோசனையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

29. ஆம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் (நிகழ்ச்சி நிரலில் 81 ஆவது விடயம்)

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பிரதேசங்களுக்கு விரைவாக நீர்விநியோக வசதிகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேசங்களில் குழாய் நீர் விநியோகத்துக்கான கட்டமைப்பில் இடை நடுவில்  நிரப்பப்படும் திட்டத்துக்காக ஆலோசனை முன்வைத்துள்ள M/s Sunpower Construcation (Pvt) Ltd  நிறுவனத்தின் ஆலோசனை பாராட்டுதல் மற்றும் சிபார்சுகளை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்தைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வள அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

30. தேசிய வைத்தியசாலையில் தொண்டை, காது. மூக்கு (ஈஎன்டி) ஆகியவற்றில் சேவை வழங்குவதற்கான வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 82 ஆவது விடயம்)

தொண்டை. காது. மூக்கு (ஈஎன்டி) தொடர்புபட்ட பகுதிகளில்  ஏற்படும் குறைபாடுகளை அடையாளம் காணுதல். சுpகிசை அளித்தல், ஆகியவற்றுகான வசதிகளை மேம்படுத்துல் தேசிய வைத்தியசாலை. போதனா வைத்தியசாலை, மாகாணத்தின் பெரியாஸ்பத்திரி.  மாவட்ட  மற்றும் பெரியாஸ்பத்திரி. மற்றும் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக ஜெர்மனி M/s VAMED Engineering Deustschland GmbH நிறுவனத்தினால் திட்டமிட்ட வகையில் திட்ட ஆலோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை பாராட்டுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குமான தேவையான பேச்சுவார்;த்தை பணிகளை மேற்கொள்வதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

31. இலங்கை துறைமுக அதிகார சபைக்காக இரண்டு வள்ளங்களை கொள்வனவு செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)

கொழும்பு துறைமுகத்துக்குள் காத்திரமான கடற்படை சேவையை வழங்குவதற்கு தேவையான - இரண்டு வள்ளங்களை இலங்கை துறைமுக அதிகார சபை கொள்வனவு செய்வதற்காக   பெறுகை அமைச்சரவைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய 3.12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வரையறுக்கப்பட்ட கொழும்பு டொக்கியாட் நிறுவனத்துக்கு வழங்குவதற்காக துறைமுகம் மற்றும் கடல் அலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அஅவர்கள் சமர்பபித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

32. 100 மெகாவோட் காற்று மூலதான மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல் (நிகழ்ச்சி நிரலில் 90 ஆவது விடயம்)

100 மெவோட் காற்று மின் சக்தி நிலையம் ஒன்றை ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்புடன் மன்னார் தீவின் தெற்கு கரையோரத்தில் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய டென்மார்க்கின் - நிறுவனத்திடம் வழங்குவதற்கும் அதற்கான உடன்படிக்கையை எட்டுவதற்குமாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் சமர்ப்பிதத ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

33. குழிகளாக உள்ள களனி கங்கையின் வலது பகுதியில தகடு மதில் ஒன்றை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)

களனி கங்கையின் கொலன்னாவை அளுத்முல்ல பிரதேசம் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்தோடு சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்குத் தீர்வாக நதியின் கரையோரத்தில் தூரத்தில் தகடு மதில் ஒன்றை அமைப்பது பொருத்தமான ஆலோசனை  முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 604 மில்லியன் ரூபா முதலீட்டுடன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக நீர்ப்பாசன மற்றும் நீர்வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

34. தெல்தெனிய. பூகொட. வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 98 ஆவது விடயம்)

நீதிமன்ற பணிகளை மிகவும் காத்திரமான முறையிலும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்வதற்காக தேவையான வசதிகளை செய்யும் நோக்கில் தெல்தெனிய பூகொடை மற்றும் வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்காக புதிதாக கட்டிடம் சிலவற்றை நிர்மாணிப்பதற்கான வசதியை செய்வதற்காக அரசாங்கம் கொண்டுள்ள  கட்டிட நிர்மாணத்தின் மூலம் இதற்பான நிர்மாணப்பணிகளை மேற்கொள்வதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோறளை அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

35 . புதிய அமைச்சரவை திருத்தத்துக்கு அமைவான வகையில் 2017   ஆம் ஆண்டு இலக்கம் 30இன் கீழான ஒதுக்கீடு சட்டம் மூலத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 103 ஆவது விடயம்)

2018 ஆம் ஆண்டில் பல சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட  அமைச்சரவை திருத்தத்துக்கு அமைவாக இதுவரையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் எண்ணிக்கை 43 ஆக குறைக்கப்பட்டுள்ளதுடன் இந்த அமைச்சுக்களின் விடயங்களுக்கு உட்பட்ட வகையில் 2018 ஆம் ஆண்டுக்காக  பாராளுமன்றத்தினால் கடந்த டிசம்பர் மாதத்தில்  நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு உட்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அடங்கியுள்ள மானியங்களை புதிய அமைச்சுக்கள் மத்தியில் விநியோகிப்பதன் மூலம் திருத்தத்தை மேற்கொளளும்  தேவையேற்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள மொத்த செலவு ஆகக் கூடிய வரையறையின் மாற்றம் இல்லாத வகையில்  இந்த ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை திருத்தை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

36. இலங்கை சுற்றுலா மேம்பாடு (நிகழ்ச்சி நிரலில் 108 ஆவது விடயம்)

இலங்கை  கவரக் கூடிய சுற்றுலா  கிராமமாக மேம்படுத்துவதற்காக விரிவான பிரசார வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 6 பிரசார வர்த்தக நிறுவனங்களினால் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விருப்பப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்  திட்டதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கு அமைய 314 மில்லியன் ரூபாவுக்கு ஜே வோல்டர் தொம்சன் நிறுவனத்துக்கு வழங்குவதற்காக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

37. புதிய குடியிருப்புக்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 110 ஆவது விடயம்)

மாதிரிக் கிராமம் உள்ளிட்ட புதிய குடியிருப்புக்களின் உள்ள பயனாளிகளின் வசதிக்காக பிரவேச வீதி வசதியை மேம்படுத்துவதற்காக தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13