YouTube, உலகில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள அநேகரால் மிகவும் பார்வையிடப்பட்ட வலைத்தளம், குறித்த சமூக வலைத்தளம் கடந்த சில மணி நேரங்களுக்கு மேலாக அதன் பல தளங்களில் கோளாறு ஏற்பட்டு முடங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.

சேர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கிய நிலையில், தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து யூடியூப் இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

"YouTube, YouTube TV மற்றும் YouTube மியூசிக் ஆகிய பக்கங்கள் முடங்கியுள்ளன. சுமார் ஒரு மணித்தியால அளவில் முடங்கி இருந்த youtube கோளாறு பற்றி முறைப்பாடுகள் குவிந்த நிலையில் YouTube ட்விட்டர் பக்கத்தில்,

''யூடியூப் வேலை செய்யாதது குறித்த உங்களது தகவலுக்கு நன்றி. யூடியூப் டிவி மற்றும் யூடியூப் மியூசிக்கை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும், தடங்கல்களுக்கு வருந்துகிறோம்” என டுவிட் செய்யப்பட்டிருந்தது.

வீடியோ பார்வையிடல், பதிவிறக்கம் செய்தல், பதிவேற்றம் செய்தலில் கோளாறுகள் ஏற்பட்டிருந்தது 

அதன் பின்னர் இன்று காலை கோளாறு திருத்தப்பட்டு மீண்டும் யூடியூப் செயற்பட தொடங்கியது. 

இந்நிலையில் காலை YouTube டுவிட்டர் பக்கத்தில் 

''நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி.  எவருக்கேனும் பிரச்சினை இருப்பின் தயவுசெய்து  எங்களிடம் தெரிவிக்கவும்.'' என்று பதிவிடப்பட்டுள்ளது. 

இருப்பினும் யூடியூப் டுவிட்டர் பக்கத்தில் கோளாறுக்கான பாவனையார்களின் கேள்விக்கு இன்னும் பதில் அளிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.