ஜனாதிபதி, பிரதமர் தலையிட்டு ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக பெற்றுத்தர வேண்டும் - தோட்டத்தொழிலாளர்கள்

Published By: Digital Desk 4

17 Oct, 2018 | 11:12 AM
image

பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை தோழ்வியடைந்ததையடுத்து, அக்கரப்பத்தனை பெல்மோரல், கிரன்லி, பெரிய நாகவத்தை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் டயகம தலவாக்கலை பிரதான வீதியில் பசுமலை பெல்மோரல் சந்தியில் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தை சுமார் இரண்டு மணித்தியாலம் முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக பெற்றுத்தர முன்வர வேண்டும்.

இதேவேளை தோட்ட கம்பனிகளுக்கு அதிகமான வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் எங்களுக்கு பிச்சை போடுவது போல 50 அல்லது 75 ரூபாய் வழங்குவது நியாயமற்ற செயலாகும்.

கடந்த காலங்களிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது, தங்களை ஏமாற்றியதையும் சுட்டிக்காட்டினர்.

எனவே காலம் தாழ்த்தாமல் வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக சம்பள உயர்வை வழங்க அனைத்து மலையக அரசியல்வாதிகளும் ஒன்றுப்பட்டு பெற்றுத்தர வேண்டும் என ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38