நாளாந்தம் வீதி விபத்து அதிகரிக்கின்றது என்கிறார்:நளின்

Published By: R. Kalaichelvan

16 Oct, 2018 | 06:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வீதிவிபத்துக்களின் மூலம்  இடம் பெறுகின்ற உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்த போக்கிலே காணப்படுகின்றது.  வீதி விதிமுறைகளை பின்பற்றாமையே  விபத்துக்களுக்கான பிரதான காரணம்  என சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்   நளின் பண்டார தெரிவித்தார்.

வீதி விபத்துக்களை தடுக்க  வேண்டுமாயின்  நவீன உத்திகளை  போக்குவரத்து துறையில் செயற்படுத்த வேண்டும்.இதற்கான  செயற்திட்டங்கள் தற்போது நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

உயிர்களை பாதுகாப்பதே ஐக்கிய தேசிய கட்சியின்  நோக்கம் எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

நாட்டில் ஏதாவது ஒரு  இடத்தில் ஒரு மணித்தியாலத்திற்கு ஒருவர் வீதமாவது வீதிவிபத்தினால் உயிரிழக்கின்றனர். இந்நிலைமை தொடர்ந்தே அதிகரித்ததாகவே காணப்படுகின்றதே தவிர குறைவடையவில்லை. 2012ம் ஆண்டு தெடக்கம் இன்று  வரை   வதிவிபத்தின் காரணமாக  18491பேர் உயிரிழந்துள்ளனர்.

 இவர்களில் பெரும்பாண்மையானோர் இளைஞர்கள். இந்த எண்ணிக்கையானது நாட்டின் சனதொகையில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றது.

நடப்பாண்டில்  ஜனவரி தொடக்கம் இன்று வரை  2500ற்கும் மேற்பட்டோர் வீதி விபத்துக்களினால் மரணித்துள்ளனர்.  அதிவேக நெடுஞ்சாலைகளில் வீதி விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்ற காரணிகளினால்  தற்போது   நெடுஞசாலை விபத்துக்கள் சடுதியாக குறைவடைந்துள்ளது . 

ஆனால்   பெருந்தெருக்களில் வாகன சாரதிகளுக்கிடையில் காணப்படுகின்ற போட்டித் தன்மை மற்றும் மதுபாவனை போன்ற காரணிகளே  பாரிய விபத்துக்களுக்கு காரணம் என கடந்த கால அறிக்கைகளில் வெளிவந்துள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04