முதல் டெஸ்டில் சதம்பெறும் வாய்ப்பை தவறவிட்டார் பாக்கிஸ்தானின் பகர் ஜமான்.

Published By: Rajeeban

16 Oct, 2018 | 04:50 PM
image

பாக்கிஸ்தானின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பகர் ஜமான் தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பகர் ஜமான் 94 ஓட்டங்களிற்கு ஆட்;டமிழந்தார்.

அபுதாபியில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி தனது முதல் ஐந்து விக்கெட்களையும் 57 ஓட்டங்களிற்குள் இழந்து தடுமாறியது.

அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நதன்லயன் அடுத்தடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி பாக்கிஸ்தான் அணியை நிலைகுலையச்செய்தார்.

எனினும் ஆறாவது விக்கெட்டிற்காக இணைந்த பகர் ஜமானும் பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அகமட்டும் 147 ஓட்டங்களை பெற்றனர்.

பாக்கிஸ்தான் அணி 204 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை தனது முதல் டெஸ்டில் விளையாடும் பகார் ஜமான் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் தனது முதல் டெஸ்டில் சதம் பெறும் வாய்ப்பை தவறவிட்ட ஐந்தாவது வீரர் என்ற பட்டியலில் பகார்ஜமான் இணைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35