தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலை  - கோவிந்தன் 

Published By: Daya

16 Oct, 2018 | 04:09 PM
image

கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலையில் மாறுபட்ட கொள்கையினைக் கொண்டவர்களைக் கொண்ட கிழக்கு தமிழர் ஒன்றியம் தொடர்பில் பல சந்தேகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சீருடை சாறிகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

  தமிழ் மக்கள் தமது உரிமையினைப்பெற்றுக்கொள்வதற்கு ஒன்றுபட்டுபோராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.மீண்டும் அகிம்சை ரீதியாக போராடவேண்டிய நிலையில் இன்று தமிழ் மக்கள் உள்ளனர்.தங்களை தாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியை உருவாக்கவேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதிநிதிகளை அதிகரிக்கப்போகின்றோம் என்று கூறி கிழக்கு தமிழர் ஒன்றியம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.கூட்டு என்பது கொள்கையின் அடிப்படையில் வரவேண்டுமே தவிர பல்வேறு குரோதங்களைக்கொண்டவர்களின் கூட்டாக வரக்கூடாது.கொள்கை அடிப்படையிலான கூட்டுதான் நீடித்து நிலைத்து நிற்கும். குரோதங்களைக்கொண்டவர்களைக்கொண்டு தேர்தலுக்காக ஒரு கூட்டினை உருவாக்கினால் அது நிலைத்து நிற்காது.

தமிழ் மக்களிடம் இருந்து உறுப்பினர்களை இவர்கள் பெற்றுக்கொண்டாலும் ஆட்சியமைக்கும் காலத்தில் வேறுவேறு பக்கங்களுக்கு பிரிந்துசெல்லும் நிலைமை உருவாகும்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் ஐந்து கட்சிகள் இணைந்துள்ளதாக கூறுகின்றனர்.அதில் சில கட்சிகள் வடகிழக்கு இணைப்பு ஆதரவானதாகவும் சில கட்சிகள் எதிரானதாகவும் உள்ளது.அதில் உள்ள ஒரு கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிறையில் உள்ளபோது அவரை நாமல்ராஜபக்ஸ வந்து சிறையில் சந்தித்து செல்கின்றார்.

இவ்வாறான பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் உள்ளபோது கொள்கையில் மாறுபட்டு உள்ளவர்கள் ஒன்றுகூடி இறுதியில் தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று விலைபோனவர்களாகவும் மற்ற இனத்தவர்களுக்கு ஆதரவானவர்களாகவும் சென்று இறுதியில் அவர்கள் கூட்டணியாக நீடித்து நிற்கும் சூழ்நிலையில்லாமல்போகும்.

கொள்கையின் அடிப்படையில் ஏற்கனே கூட்டினைக்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே ஒற்றுமையில்லாத நிலையிருக்கின்றது.ஒரு கட்சி மேல் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக இன்னுமொரு கட்சி தோல்களில் சவாரி செய்யும் நிலையில் கொள்கையில் முரண்பட்டு நிற்பவர்கள் எவ்வாறு ஒன்றுபட்டுசெல்வார்கள் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் இன்று எழுந்துள்ளது.

தமிழ் மக்கள் கடந்த காலத்தில் சகலதையும் இழந்துள்ளனர்.இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த நாங்கள்,இன்று தோல்வியடைந்த சமூகமாக இருக்கின்றோம்.நாங்கள் இழந்த இழப்புகளுக்கு ஒரு நிவாரணத்தினை நாங்கள் பெற்றுக்கொள்ளவேண்டும்.தமிழ் மக்கள் நிம்மதியாக நிரந்தரமாக வாழவேண்டுமானால் கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணையவேண்டும்.

வடகிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும்.தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடாது என்பதில் பெரும்பான்மையினர் கண்ணும்கருத்துமாகவுள்ளனர்.

விடுதலைப் போராட்டம் வீருகொண்ட 80 காலப்பகுதிகளில் பல முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் போராட்ட இயக்கங்களில் இணைந்திருந்தார்கள்.அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இனங்களுக்குள்ளே முரண்பாகள் ஏற்படுத்தப்பட்டன. ஊர்காவல் படையென்ற அமைப்பினை உருவாக்கினார். ஆயுதங்களை வழங்கி இரு இனங்களிடையே மோதல் நிலையினை உருவாக்கினர். இன்று அது ஒரு வடுவாகவே இருக்கின்றது.

வடகிழக்கில் இரு இனங்களும் ஒற்றுமையாக இருக்கும்போதுதான் இரு சமூகங்களும் முன்னேற்றமடையும்.வடகிழக்கு இணைந்த சகல அதிகாரங்களும் கொண்ட ஒரு சுயாட்சி உருவாகவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31