மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி

Published By: R. Kalaichelvan

16 Oct, 2018 | 11:59 AM
image

லுணுவில வடக்கு தம்மிகம பிரதேசத்தில் நேற்று  மாலை  ஜின்ஓயா ஆற்றில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து மீன் பிடிக்கச் சென்றிருந்த போது நீரில் மூழ்கி 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த அயேஸ் பெர்னாண்டோ என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு இளைஞர்கள் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இருந்த இடத்தில் மீன்கள் இல்லாதிருந்ததால் ஆற்றின் மறு கரைக்கு நீந்திச் சென்று கொண்டிருந்த போதே குறித்த  இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக  பொலிஸாரின்  ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு இவ்விளைஞர் நீரில் மூழ்கியதையடுத்து நண்பர்கள் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு  கரை சேர்த்து உடனடியாக மாராவில வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01