தமிழினப் படுகொலை ; தமிழக மனித உரிமை குழுவிடம் சுரேஷ் விடுத்த கோரிக்கை

Published By: Vishnu

16 Oct, 2018 | 11:51 AM
image

தமிழ் மக்களின் இனப்படு கொலைக்கான நீதிவேண்டி தமிழக சட்டசபை இந்திய பாராளுமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழக மனித உரிமை குழுவினரிடம் கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாடு சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான உயர் மட்டகுழுவினர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களுக்கும், காணாமல்போன உறவுகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான சந்திப்பு மட்டு. தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது தர்மலிங்கம் சுரேஷ் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 

கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் இன்றுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 23 கிராமங்கள் அழிக்ப்பட்டுள்ளதுடன் கிராமத்திலே 100 தொடக்கம் 200 வரையானேர் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் பேயுள்ளனர். 

இவ்வாறு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்  கிராமங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் 

இங்கு நடந்த படுகொலைகள் தொடர்பாக நீதி விசாரணை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை. அதேவேளை இந்த அரசாங்கங்களுடன் காலம் காலமாக எமது தமிழ் தலைவர்கள் வருகின்றார்கள். அவர்களை  அரசாங்கம் தன்வயப்படுத்தி இந்த இன அழிப்புக்களையும் அநியாயங்களையும் வெளிக் கொண்டுவர விடாமல் ஏதே ஒரு சலுகைகளை செய்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் இது எமது மக்களுடைய ஒரு அவலமான நிலைப்பாடு ஆகும் 

அதிகமானோர் சிறையில் வாடுகின்றார்கள். காணாமலபோன அதிகமானவர்களின் உறவுகள் மக்கள் தத்தளிக்கின்றனர். குழந்தைகள் பிள்ளைகள் தமது அன்புக்குரிய உறவினர்களை தேடி அலைகின்றார்கள் இதனால் அவர்களின்  பொருளாதார, கல்வி ரீதியில் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.  

கிழக்கு மாகாணத்தில் அரசின் நெருக்கடி ஒரு புறமிருக்க் சகோதர முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஊர்காவல் படை என்ற பேர்வையில் பல தமிழ் மக்கள் வாழுகின்ற எல்லைக் கிராமங்களில்  படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன இவ்வாறு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

இந் நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் அழிவுக்குள்ளான ஆபத்தான நிலையில் உள்ளது. கிழக்கு மக்கள் வடக்குடன் சேர்ந்து வாழாவிட்டால் கிழக்கு மக்களின் வாழ்வு என்பது 5 அல்லது 10 வருடத்தில் கேள்விக் குறியாகிவிடும். 

கிழக்கில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் நில அபகரிப்பு தமிழர்களுடைய பொருளாதார வளச் சுரண்டல்களை செய்யப்படுகின்றது.  

70 வருடங்களாக தமிழ்மக்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இதனை தழிழகத்தில் இருந்து நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்  எங்களுடைய தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இனப்படுகொலையும் இனத்தை இருப்பை அழிக்கின்ற காலம் காலமாக செய்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் அவதானித்து வந்திருப்பீர்கள்.

அந்த வகையில் எங்களுடைய அவலங்களையும் இங்கு எங்கள் மக்களுக்கும்  நடந்த அநீதிகளையும் கேட்பதற்காக முதல் மறையாக வந்திருப்பது என்பது வரலாற்று சிறப்பாகும். 

எனவே இங்கு நடந்த அநீதிகள் படுகொலைகளை தமிழக சட்டசபைக்கு கொண்டு சென்று அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21