“1000 ரூபா சம்பளத்துடன் அனைத்து சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும்” ; யட்டியாந்தோட்டை மக்கள் 

Published By: Digital Desk 4

15 Oct, 2018 | 05:29 PM
image

யட்டியாந்தோட்டையில் இன்று காலை 10.00 மணியளவில் தோட்டதொழிலாளர்கள் 1000 ரூபா சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். 

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்களுக்கும் இடையில் இடம்பெறும் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றுவரும் சந்தரப்பத்தில் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தத்தை கொடுக்குமுகமாக இப்போராட்டம் அமைந்திருந்தது. 

போராட்டத்தை தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது. கேகாலை மாவட்டத்தில் தெரணியகலை, யட்டியாந்தோட்டை, ருவன்வெல்ல தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய தோட்டப்புறங்களை சேர்ந்த 700 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்சிபேதங்களை மறந்து இந்த தார்மீக போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். 

இப்போராட்டதில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனநாயக மக்கள் முன்னணியின் யட்டியாந்தோட்டை பிரதேச சபை தமிழ் உறுப்பினர் சுதர்சன் ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பெருமாள் ரமேஸ் சப்ரகமுவ மாகாண சபைபயின் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் நிஹால் பாரூக் மற்றும் அரசியல் பிரமுகர்களும் மக்களோடு இணைந்து போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.

யட்டியாந்தோட்டை வின்சன்ட் பெரேரா மைதானத்தில் ஆரம்பித்த மக்கள் பேரணி ஊர்வலமாக நகரை வலம் வந்து சுமனசமன் தேவாலயம் வரை சென்றது. இதன் போது மக்கள் உரத்து 1000 ருபா சம்பபளத்தை வழங்குமாறு குரல் எழுப்பினர். 

சுமார் 2 மணித்தியாலயம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் ஹட்டன் கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து ஸ்தம்பிமானது. 

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பாடுத்தா வண்ணம் யட்டியாந்தோட்டை பொலிஸார் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தினர். பிரதான பாதை குறிப்பிட்ட நேரம் ஒருவழி போக்குவரத்தாக பயன்படுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர் பிரதான பாதையில் அமர்ந்து வாகனங்களை செலுத்த இடையூறு ஏற்படுத்தியதால் போக்குவரத்து தடைப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்துடன் அனைத்து சலுகைகளும் வழங்கப்படல் வேண்டும் எனவும் தீபாவளி முற்பணமாக 1500 ரூபா வழங்கப்படவேண்டும் என்றும் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் டுப்பட்டனர். 

மற்றும் கூட்டு ஒப்பத்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கு எதிராகவும் தமது கருத்துக்களை பதிவுசெய்திருந்தனர். ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களின் துயர்களை கருத்தில் கொண்டு நியாயமான சம்பள உயர்வினை பெற்றுத்தரவேண்டும். 

மலையக தமிழர்கள் அனைவருக்கும் உரிமையுள்ளது எமது தொழிலாளர்களை காட்டிக்கொடுக்கும் அரசியல் வாதிகளுக்கு நாம் தகுந்த பாடம் காட்டுவோம். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் எமது பலத்தை வெளிப்படுத்துவோம். நாட்டின் பிரதமர்  2 வருடத்திற்கு முன் தலவாக்கலையில் இடம்பெற்ற கூட்டத்தில் 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார். 

இன்று அவரின் உறுதிவார்த்தை என்னவாயிற்று. அடுத்து இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜ வாழ்க்கை வாழ்கிறார் அவரின் இந்த நிலமைக்கு யார் காரணம் நாம் வாக்கு அதனை அவர் மறந்துவிடக்கூடாது. எனவே அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் எமக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக் கொடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02