சமூகவலைத்தளத்தால் சேர்ந்த களியாட்டக் கும்பல் சிக்கியது ; 22 ஆண்கள், 12 பெண்கள் கைது

Published By: Vishnu

15 Oct, 2018 | 02:40 PM
image

(இரோஷா வேலு) 

சமூக வலைத்தளங்களினூடாக ஒன்று சேர்ந்த இளைஞர் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றின் இறுதியில் பிரதேசவாசிகளுடன் ஏற்பட்ட தகராரில் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட 34 பேரில் இருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

இரத்தினபுரி, துரேகந்த பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்படி களியாட்ட நிகழ்வானது கடந்த சனிக்கிழமை இரவு ஆரம்பமாகி நேற்று  மாலை வரையில் தொடர்ந்துள்ளது. 

இதில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் மதுபோதையில் வீடு திரும்புவதற்காக மோட்டார் வாகனமொன்றில் குறித்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். 

இவர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே அப்பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். 

விபத்தையடுத்து முச்சக்கர வண்டி சாரதிக்கும் குறித்த இளைஞர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட, களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மேலும் சிலரும் அப்பிரதேசத்திற்கு வந்து கூச்சலிடவே, அங்கு குழுமிய பிரதேசவாசிகளினால் குறித்த பகுதி கலவரமடைந்த நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது விரைந்து செயற்பட்ட பொலிஸாரினால் குறித்த களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 34 பேரும் விசாரணைக்களுக்காக இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

இதில் 19 முதல் 30 வயதிற்கிடைப்பட்ட 22 ஆண்களும் 12 பெண்களுமே காணப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் குறித்த 34 பேரையும் சோதனையிட்ட வேளையில் அவர்களில் இருவர் போதைப்பொருள் தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட மற்றைய 32 பேரும் பொலிஸாரின் கடும் நிபந்தனையின் அடிப்படையில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து கேரள கஞ்சா 4 கிராம் மற்றும் 530 கிராம் ஐஸ் மற்றும் மேலும் சில போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து குறித்த இருவரையும் இன்றைய தினம் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.   

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51