(க.கமலநாதன்)

நாட்டின் தனியார் தொழில் துறையினர் சம்பளத்தை 2500 ரூபாவால்  அதிகரிப்பது தொடர்பிலான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் சம்பள உயர்வு இடம்பெறாது. இது ஒருமாயை.

இவ்வாறு அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கப்போவதால்  எந்தவித  பலனும் இந்நாட்டு தொழிலாளர்களுக்கு கிடைக்கப்போதில்லை. என தனியார் துறையின் சம்பள அதிகரிப்பிற்கு பராளுமன்ற உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தூய்மையான ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பள்தை 10000 ரூபாவாக்கள் தொடர்பிலான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.ஆனால் இதனால் தனியார் துறை தொழிலாளர்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும் இது ஒரு மாயை என்றும் விரைவில் நாட்டு மக்கள் விளங்கிக்கொள்வர்.

10000 ரூபா சம்பளத்தினால் ஒருவர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியாதென மத்திய வங்கி அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 10000 சம்பளம் பெரும் தொழிலாளிகள்  எமது நாட்டில் இல்லை. அதேபோல் 2500 ரூபாவை கொண்டு ஒருவர் வாழமுடியுமென  2008 இருந்த வர்த்தக அமைச்சர் குறிபிட்டிருந்தார். அதன்போது ஐக்கிய தேசிய கட்சி தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது.

ஆனால் இன்று ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 2500 சம்பள அதிகரிப்பு தொடர்பிலான சட்டமூலம் அமுல்படுத்தப்ட்டுள்ளமை வேடிக்கையான விடயம்.