3 நாளில் ஆட்டத்தை முடித்து தொடரை கைப்பற்றியது இந்தியா

Published By: Vishnu

14 Oct, 2018 | 05:23 PM
image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 127 ஓட்டத்துக்குள் சுருட்டி, 10 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று, 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத்  தீவு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதற்கிணங்க மேற்கிந்தியத் தீவு  அணி தனது முதல் இன்னிங்ஸில் 311 ஓட்டங்களை குவித்தது. அதன் பின்னர் முதல் நாள் ஆட்டத்தை நேற்றைய தினம் ஆரம்பித்த இந்திய அணி இரண்டம் நாள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 308 ஓட்டத்தை எடுத்தது.

இந் நிலையில் 308 ஓட்டத்துடன் மூன்றாம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி 367 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 56 ஓட்டத்தினால் முன்னிலை பெற்றது.

56 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்தியத் தீவு  அணி உமேஷ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சுக்கு முகங்கொடுத்தக் தெரியாது 40.1 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டத்தை மாத்திரம் பெற்றது.

அதன்படி மேற்கிந்திய அணிக்கு முதல் ஒவரை உமேஷ் யாதவ் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பிரித்வெய்ட் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார். மறுமுணையில் கிரேன் பவுல் ஓட்டம் எதையும் எடுக்காது அஸ்வினின் பந்து வீச்சில் ரஹானேயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 6 ஓட்டங்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்காக ஹெட்மையருடன் ஷெய் ஹோப் ஜோடி சேர்ந்தாடி ஓரளவு தாக்கு பிடித்தார். எனினும் ஹொப் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவின் சுழலில் சிக்கி வெளியேறினார். 

அவரின் வெளியேற்றத்தையடுத்து ஹெட்மையரும் 17 ஓட்டத்துடன் குல்தீப் யதவ்வின் பந்து வீச்சில் புஜாராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந் நிலையில் மதியநேர உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ், ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை  போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார். இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7 ஆது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் அணித் தலைவர் ஹோல்டர் ஜோடி சேர்ந்தாடிவர மேற்கிந்திய் தீவு அணி தேனீர் இடைவேளை வர 6 விக்கெட் இழப்பிற்கு 76 ஓட்டங்களை பெற்றது.

எனினும் தேனீர் இடைவெளியின் பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தது. அதன்படி அணித் தலைவர் ஹோல்டர் 19 ஓட்டத்துடன் ஜடேஜாவின் பந்து வீச்சுலும், சுனில் அம்ப்ரிஸ் 38 ஓட்டத்துடன் குல்தீப் யாதவ்வின் பந்து வீச்சுலும், ஜோமல் வோரிக்கன் 7 ஓட்டத்துடன் அஸ்வினின் பந்து வீச்சிலும், கப்ரில் ஒரு ஓட்டத்துடன் உமேஷ் யாதவ்வின் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் மேற்கிந்தியத் தீவு அணி 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்றது. பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அசத்தலாக பந்து வீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுக்களையும், ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டினையும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அதன்படி இந்திய அணியக்கு வெற்றியிலக்காக 72 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

72 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி இன்றைய தினமே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 16.1 ஓவர்களை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கினை கடந்தது அபாரமாக வெற்றியீட்டி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் தலா 33 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்து போட்டியை முடித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59