பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அங்குள்ள சிறுபான்மையின அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

இந்த நிலையில் ஹோலி, தீபாவளி, ஈஸ்டர் ஆகிய பண்டிகைகளுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து உறுப்பினரான ரமேஷ் குமார் வன்க்வானி தீர்மானம் கொண்டு வந்தார். 

இதையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய மத விவகாரங்களுக்கான இணை மந்திரி பீர் அமினுல் ஹஸ்னத், சிறுபான்மையினருக்கு அவர்களின் பண்டிகைகளின்போது விடுமுறை அளிப்பதற்கு அரசு நிறுவனங்களின் தலைமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது என்று தெரிவித்தார். 

சிறுபான்மை மக்களின் மத பண்டிகைகளுக்கு பொது விடுமுறை அறிவிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என தகவல் தொடர்புத்துறை மந்திரி பர்வாய்ஸ் ரஷித் பேசினார். 

தீர்மானத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து தீபாவளி, ஹோலி மற்றும் ஈஸ்டர் பண்டிகை நாட்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது.