மதுபோதையில் தனது மனைவியைத் தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நவகத்தேகம பகுதியில் வைத்து இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் சிலாபம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இன்று அதிகாலை பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நவகத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.