இந்தியாவில் 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி சிலேட்டர் ஹவுஸ் வீதியை சேர்ந்தவர் தன்சீர் என்ற 30 வயதுடைய  கூலித்தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிலே மனைவியுடன் குடியிருந்து வந்தார். இன்னும் சில வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு பகுதியில் அனைத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு  பயன்படுத்த 2 குளியல் அறைகளே உள்ளன. 

இந்த நிலையில் மாணவி குளியல் அறைக்கு குளிக்கச் சென்றபோது அங்கு மறைந்திருந்த தன்சீர், மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் பிறகு அதைகூறியே மறுப்படியும் பலாத்காரம் செய்யதாகவும் மாணவி தெரிவித்தார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தையடுத்து, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து வாலிபர் தன்சீரை கைது செய்தனர். 

மேலும் இதுகுறித்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று தீர்ப்பு அளித்தார்.

அதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தன்சீருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.