தெஹிவளை, கவுடான வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் கருகிய நான்கு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. 

மின்சாரம் தாக்கியதில் இவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.