நண்பர்களுக்கிடையில் மோதலில் பலியான தாய் : பரிதாப சம்பவம்

Published By: Robert

16 Mar, 2016 | 12:05 PM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் நண்பர்களுக்கிடையிலான மோதலை விலக்க சென்ற 65 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதலுக்கு இழக்காகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இத்தோட்டத்தை சேர்ந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 24ம் திகதி மாலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இரு நண்பர்கள் மது அருந்திவிட்டு வாய் தர்க்கம் ஒன்று கைகலப்பில் முடிந்துள்ளது.

இத் தோட்டத்தில் தொடர் வீட்டு குடியிருப்பில் பக்கம் பக்கமாக இருக்கும் இந்த நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தவிர்ப்பதற்காக மோதலில் ஈடுப்பட்டுள்ள ஒருவரின் தாயார் இதனை தடுக்க முற்பட்டுள்ளார்.

இதில் தாயாரின் கையில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த தாயார் இந்த நண்பர்களுக்கிடையில் சிக்குண்டு தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த தாயார் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்த பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2 தினங்களில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய இவர் தாக்குதலில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட இவர் 14.03.2016 அன்று இரவு உயிரிழந்துள்ளார். இவரின் மரண விசாரணை நேற்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.குடாகமவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் குறித்த தாயாரின் வயிற்றில் குடல் பகுதி வெடித்து காணப்பட்டதை உணர்ந்த மரண விசாரணை அதிகாரி இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்து இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து தலவாக்கலை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுப்பட்ட பிரிதொரு நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த நபர் 2 பிள்ளைகளின் தந்தையாவர். இவர் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக உயிரிழந்த பெண் முன்னரே தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததை அடிப்படையாக கொண்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை பொலிஸ் விசாரணையின் பின் இன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாக விசாரணையை மேற்கொள்ளும் தலவாக்கலை குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44