பாகிஸ்தானின் பெஷாவரில் அரச ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் தலைமை செயலக ஊழியர்கள் 25 பேர் பலியாகி உள்ளனர். 

பாகிஸ்தானின் மர்தான் பகுதியில் இருந்து அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ், பெஷாவரில் குண்டு வைத்து தாக்கப்பட்டுள்ளது. 

இதில் பஸ்ஸில் பயணம் செய்த தலைமை செயலக ஊழியர்கள் 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தலைமை செயலக ஊழியர்களை குறிவைத்தே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பொலிஸ் உயரதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,

 பஸ்ஸின் உள்ளே வெடி பொருட்களை மறைத்து வைத்து வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்த போது பஸ்ஸில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.