அரசியல் கைதிகளின் விடுதலைக்காக  அனுராதபுரம் நோக்கி அணிதிரளுமாறு பல்கலைகழக மாணவர்கள் அழைப்பு

Published By: Vishnu

12 Oct, 2018 | 06:04 PM
image

அரசியல் கைதிகளை விடுதலையை வலியுறுத்தி நாளை காலை மதவாச்சியிலிருந்து ஆரம்பமாகி அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்படவுள்ள நடை பவனியில் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொண்டு அணிதிரளுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் அரசியல் கைதிகள் கடும் குற்றசெயல்களை செய்த குற்றவாளிகள் அல்ல. அன்றைய சூழலில் கட்டளையிட்டவர்கள் எல்லாம் பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்துகொண்டிருக்கும் இந்த சூழலில் சாதாரண செயற்பாடுகளை செய்தவர்கள் பல ஆண்டுகளாக சிறைக்கூடங்களிலே இருக்கிறார்கள் இவர்களது பிரச்சினையை இலங்கை அரசாங்கம் அரசியல் பிரச்சினையாக பார்த்து, அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். 

அவர்களது பிரச்சினையை சட்டத்திற்குட்பட்டு தீர்க்க வேண்டாம் என்றும், அதனை   சட்டவிவகாரத்திற்குட்பட்ட பிரச்சினையாக பார்க்ககூடாது.

அவர்கள் வாழவேண்டியவர்கள், உடல் என்பது வாழ்வதற்காகவே. அவர்கள் தொடர்ந்து உயிர்வாழவேண்டும் அதற்கு சந்தர்பம் வழங்கபடவேண்டும். அவர்கள் விடுதலையாக்கபடவேண்டும் என்பதை மனிதாபிமானரீதியாக  உணர்ந்து அவர்களை விடுதலைசெய்யவேண்டும் என்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் அரசிடம் கோரிக்கையினை முன்வைக்கிறோம் எனவும் குறிப்பிட்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02