காதல் விவகாரம் : அதிர்ச்சிக்குள்ளான மாணவி: இறுதியில் பொய்யானது

Published By: Raam

16 Mar, 2016 | 11:16 AM
image

காதலை ஏற்க மறுத்த மாணவியை பழிவாங்க அவளின் கற்பை சூறையாடி  மாணவன் அரங்கேற்றிய நாடகத்தால் சுவிட்சர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சுவிஸின் ஒச்ஷ்வெய்ஸர் (Ostschweizer) பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் 18 வயது மாணவன் மற்றும் 16 வயது மாணவி  சில தினங்களுக்கு முன்னர் பள்ளி சுற்றுலா தொடர்பாக ஜேர்மனி நாட்டிற்கு சென்றுள்ளனர்.


ஜேர்மனியில் உள்ள வெய்மர் (Weimar) என்ற நகரில் மாணவர்கள் அனைவரும் ஒரு விடுதியில் தங்கினர்.அன்று  இரவு வேளையில் 18 வயதான மாணவன், அவரது நண்பன் மற்றும் 16 வயதான அந்த மாணவியும் அளவுக்கு அதிகமாக மது மற்றும் போதை மருந்துகள்  எடுத்துள்ளனர்.


மது மற்றும் போதை அதிகமாகியதால் சுயநினைவை இழந்த அந்த மாணவி மயங்கி மறுநாள் எழுந்திருக்கும்போது அவர் அருகில் 18 வயதான மாணவனின் நண்பன் நெருக்கமாக உறங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.


மற்றைய நண்பனிடம் இரவு என்ன நடந்தது என்று வினவியபோது அந்த நண்பன் , ‘இரவு நேரத்தில் நீ மயக்கம் ஆகியதால் என்னுடைய நண்பன் உன் அனுமதி இல்லாமல் உன்னை கற்பை சூறையாடி விட்டான். நீ கர்ப்பம் தரிக்க  கூடாது என்பதற்காக மாத்திரையையும் உனக்கு கொடுத்துள்ளான்’ என கூறியுள்ளான்.


இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி வகுப்பாசிரியரிடம்  கூறியுள்ளார். நடந்தவை உண்மையா என தெரிந்துக்கொள்ள வைத்தியசாலையில்  பரிசோதனை செய்துக்கொள்ள அவர்களை அழைத்துச் சென்றவேளை  ’இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸாரிடம் புகார் கூறுங்கள்’ என மருத்துவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்.


இதனை தொடர்ந்து  மாணவியும் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் தான் அனைத்து நாடகமும் வெளிச்சமாகியுள்ளது.


மாணவனின் காதலை மாணவி ஏற்க மறுத்ததால் அவரை அவமானப்படுத்தி பழிவாங்குவதற்காக’ ‘மது குடித்துவிட்டு மயங்கிய மாணவியை கற்பழித்து விட்டதாக இருவரும் பொய் கூறியுள்ளனர்.மாணவிக்கு கொடுத்ததும் சாதாரண மாத்திரை தான். இரண்டு மாணவர்களும் நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52