சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயெஸ் ரொக்கெட்டில் கோளாறு : விண்வெளி வீரர்கள் மீட்பு

Published By: Digital Desk 7

12 Oct, 2018 | 03:26 PM
image

அமெரிக்கா மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்கி புறப்பட்ட ரொக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் பயணித்த இரு விண்வெளி வீரர்களும் எது வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து நாஸா,

ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினையும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேகையும் ஏற்றிக் கொண்டு சோயெஸ் ரொக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி கஜகஸ்தானிலுள்ள ரபகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது.

விண்ணிற்கு செலுத்தப்பட்டு சிறிது நேரத்திலேயே ரொக்கெட்டின் இரண்டாம் கட்ட என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து ரொக்கெட்டிலிருந்த விண்வெளி ஓடம் தனியாகப் பிரிந்த பூமியை நோக்கி பாயத் தொடங்கியது.

எதிர்பார்த்ததை விட மிக வேகமாக தரையை நோக்கி விண்வெளி ஓடம் பாய்ந்து வந்தமையால் அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் அளவுக்கு அதிகமான புவியீர்ப்பு எதிர் விசையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இருப்பினும் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்பட்டால் அந்த சூழலை சமாளிப்பதற்காக அவர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தமையால் அந்த புவியீர்ப்பு எதிர்விசையை சமாளிக்க முடிந்தது. மேலும் பூமியில் தயாராகவிருந்த மீட்பு குழுவினருடன் தொடர்பு கொண்டு அவர்களால் பேச முடிந்தது.

மிக வேகமாக பாய்ந்து வந்த ரொக்கெட்டிலிருந்து விண்வெளி வீர்களையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட இருவரும் காயங்கள் எதுவுமின்றி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.

இச் சம்பவத்தின் பின்னர் ரஷ்யாவின் பேரிடர் மீட்பு செயலமைப்பு மிக நல்ல முறையில் செயல்படுவது உறுதியாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தை பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26