சிங்கர் ஸ்ரீலங்கா, Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும்  4K HDRதொலைக்காட்சி அறிமுகம்

Published By: R. Kalaichelvan

12 Oct, 2018 | 01:56 PM
image

சிங்கர் ஸ்ரீலங்கா மற்றும் Sony ஒன்றிணைந்து புதிய OLED மற்றும் 4K HDRதொலைக்காட்சி  உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளன.

நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையில் நாட்டில் முன்னிலை வகித்து வருகின்ற சிங்கர் (ஸ்ரீலங்கா)பீஎல்சி,மற்றும் Sony Internationalஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து அண்மையில் கொழும்பு-சங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற பிரத்தியேகமான நிகழ்வொன்றில் OLED  மற்றும் 4K HDR தொலைக்காட்சி உற்பத்தி வரிசை மற்றும் அதனுடன் இணைந்ததாக MASTER உற்பத்தி வரிசையான A9F மற்றும் Z9F தொலைக்காட்சி உற்பத்தி வரிசைகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளன.சிங்கர் (ஸ்ரீலங்கா) பீஎல்சி நிறுவனத்தின் சார்பில் சிங்கர் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரான மொஹான் பண்டிதகே,சிங்கர் குழுமத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ்,பிரதம தொழிற்பாட்டு அதிகாரியான மகேஷ்,விஜேவர்த்தன,சந்தைப்படுத்தல் துறை பணிப்பாளரான குமார் சமரசிங்க,சந்தைப்படுத்தல் முகாமையாளரான பியும் ஜெயதிலக மற்றும் வர்த்தகநாம முகாமையாளரான தாரக வணர்குலசூரிய ஆகியோரும்,Sony நிறுவனத்தின் சார்பில் Sony தென் கிழக்கு ஆசிய பிராந்திய சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரியான ஜெரமி ஹெங், Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் மற்றும் Sony International (Singapore) Ltd  இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான டில்ஷான் கம்மம்பில ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேம்பட்ட பண்பு வேறுபாடு(contrast),வர்ணம் மற்றும் தெளிவு ஆகியவற்றை வழங்கும் வகையில் இப்புதிய தொலைக்காட்சி உற்பத்தி வரிசை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Sony இன் தனியுரிமை புத்தாக்கங்களின் பலனாக,தூய்மையான 4K HDR படத் தரத்தை அனுபவிப்பதற்கு புத்தம்புதிய தெரிவுகளுடன் A8F  மற்றும் X9000F உற்பத்தி வரிசைகள் கிடைக்கப்பெறுகின்றன. BRAVIA உற்பத்தி வரிசை புத்தாக்கங்களின் கீழ் 2017 ஆம் ஆண்டில் Sony  இனால் அறிமுகப்படுத்தப்பட்ட 4K HDR OLEDதொலைக்காட்சி தொழில்நுட்பத்தில் கட்டமைப்புச் செய்யப்பட்டு,பரந்த அளவிலான பார்வையாளர்களுக்கான அதிநவீன உயர்ரக OLED தொலைக்காட்சிகளை வழங்குவதற்காக BRAVIA OLED உற்பத்தி வரிசையை Sony விஸ்தரிப்புச் செய்துள்ளது. புதிய A8F உற்பத்தி வரிசையானது Sony இன் தனித்துவமான 4K HDR gl processor-X1 Extreme இன் மரபினைக் கொண்டுள்ளதுடன், Acoustic Surface தொழில்நுட்பமானது உயர் தரத்திலான படத்தை வழங்குவது மட்டுமன்றி,கிறங்க வைக்கும் இசையையும் வெளிக்கொணருகின்றது.சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் நிகழ்வில் தனது கருத்துக்களை வெளியிடுகையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகள், சேவை மற்றும் அனுபவத்தை வழங்குவதையிட்டு சிங்கர் நிறுவனம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த அதிநவீன Sony தொலைக்காட்சிகள் இலங்கை இல்லங்களில் மக்களின் வாழ்க்கைமுறையை வளப்படுத்தும் வகையில் பல்வேறு புத்தாக்கமான தொழில்நுட்பவியல் அம்சங்களைக் கொண்டுள்ளன,” என்று குறிப்பிட்டார்.

OLED தொலைக்காட்சி என்ற வகையில் A8F  உற்பத்தி வரிசையானது ஆழமான கறுப்புரூபவ் செழுமையான மற்றும் தத்ரூபமான வர்ணங்களில் வியக்கவைக்கும் வகையில் விபரமான படங்களை வெளிக்கொணருவதுடன்,அதிவிசேடமாக பரந்த அளவில் பார்வைக் கோணத்தையும் கொண்டுள்ளது.படத் தொழிற்பாட்டு நடைமுறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள Sony,ஈடுஇணையற்ற 4K HDR படத்துடன்,வியக்கவைக்கும் வகையில் 8 மில்லியன் OLED pixel அளவில் துல்லியமான கட்டுப்பாட்டைப் பேணுவதுடன், Acoustic Surface  தொழில்நுட்பமானது முகத்திரையிலிருந்து இசை வெளிவருவதற்கு இடமளித்து,அழகிய படத்துடன், மகிழ்ச்சியான பொழுதுபோக்கு அனுபவத்தைத் தோற்றுவிக்கின்றது.

Sony International (Singapore) Ltd இலங்கை பிரதிநிதி அலுவலகத்தின் கிளைத் தலைமை அதிகாரியான ஜஸ்டின் வோங் அவர்கள் தனது கருத்தினை வெளியிடுகையில்,“மேம்பட்ட பயனாளர் அனுபவத்தை வழங்கும் உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகள் பலவற்றை இலங்கையில் அறிமுகம் செய்து வைப்பது Sony இற்கு கிடைக்கப்பெற்ற ஒரு வரப்பிரசாதமாகும். ஒரு சர்வதேச வர்த்தகநாமம் என்ற வகையில் எமது வாடிக்கையாளர்கள் உயர் தரமான உற்பத்திகளை சொந்தமாக்கி, அனுபவிப்பதற்கு உதவுவதற்காக மிகச் சிறந்த வகுப்பு தீர்வுகளை வழங்குவதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.இதற்கு இணையாக,பரந்த வகைப்பட்ட பாரிய முகத்திரை கொண்ட உயர் ரக 4K HDR தொலைக்காட்சிகளுக்கு அதிகரித்த அளவிலான வாடிக்கையாளர் கேள்விகளை ஈடு செய்வதற்காக தொலைக்காட்சி உற்பத்தி வரிசையையும் Sony விஸ்தரித்துள்ளது. X1 Extreme processor கொண்ட புதிய X9000F  உற்பத்தி வரிசையானது 85”, 75”, 65”,55” மற்றும் 49” அளவு வகுப்புக்களில் கிடைக்கப்பெறுகின்றது.

A8F மற்றும் X9000F ஆகிய இரு உற்பத்தி வரிசைகளும் Dolby Laboratories இன் HDR format ஆன Dolby Visionஇற்கு  துணையளிக்கும். கவர்ச்சியான சிறப்பம்சங்கள்,ஆழமான இருள்மயம் மற்றும் உயிரோட்டான வர்ணங்களுடன் சினிமா அனுபவத்தை வழங்கி,பார்வையாளர்களை பரவசத்தில் மூழ்கடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக, Sony நிறுவனத்தின் அதியுயர் தரத்திலான படங்களைக் கொண்ட பிரத்தியேகமான தொலைக்காட்சி உற்பத்தி வடிவங்களுக்கு பெயர்பெற்ற MASTER உற்பத்தி வரிசையாக புதிய A9F மற்றும் Z9Fஉற்பத்தி வரிசைகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன. 

மிகவும் அனுபவம் வாய்ந்த படத் தர பொறியியலாளர்களால் கடுமையான உற்பத்தி மதிப்பீட்டு நடைமுறைகளின் கீழ் இவை வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன்,தனது பிரதான MASTER  உற்பத்தி வரிசையானது வீட்டுச் சூழலுக்கு சாத்தியமான அதியுயர் படத் தரத்தை வழங்கும் என Sony நம்பிக்கை கொண்டுள்ளது. 4K படம்,வீடியோ மற்றும் ஸ்டில் கேமராக்கள்,விளையாட்டு பலகங்கள்,மொபைல் தொலைபேசிகள் மற்றும் MASTER  உற்பத்தி வரிசை போன்ற தொலைக்காட்சிகள் என “வில்லைகள் முதல் விருந்தினர் அறை”வரை நுகர்வோருக்கு4K தீர்வுகளை வழங்கும் ஒரேயொரு நுகர்வோர் இலத்திரனியல் உற்பத்தியாளர் என்ற ஆற்றலை Sony  கொண்டுள்ளது.

A9F மற்றும் Z9F MASTER ஆகிய இரு உற்பத்தி வரிசைகளும் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட,அடுத்த தலைமுறை Picture Processor X1 Ultimate இனைக் கொண்டுள்ளன. X1 Ultimate Picture Processorஆனது Sony இன் புதிய பொருள் அடிப்படையிலான அதிசிறந்த பிரிதிறன் மூலமாக அதிசிறந்த துல்லியம் மற்றும் விபரங்களுடன் படத்திலுள்ள ஒவ்வொரு பொருளையும் நுண்ணறிவுடன் கண்டறிந்து,பகுப்பாய்வு செய்கின்றது. 

Android 8.0 Oreo-equipped A9F மற்றும் Z9F  ஆகிய Android TV Hands-free Voice Search தொழில்நுட்பமானது அலைவரிசைகள் மற்றும் தொழிற்பாடுகளை இலகுவாக பிரவுசிங் செய்ய இடமளிக்கின்றது. நீங்கள் விரும்புவதைக் கேட்கவோ,அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றை காண்பிக்குமாறு கோரவோ,இலகுவாக உரையாடி அதனைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் மைக்ரோபோன்களை இரு உற்பத்தி வடிங்களும்

Android TV Hands-free Voice Search தொழில்நுட்பத்தின் துணையுடன் சிக்கலான வழிகாட்டல் சிரமங்கள் கிடையாது என்பதுடன்,சலிப்பூட்டும் வகையில் டைப் செய்ய வேண்டிய தேவைகளும் கிடையாது.

நாடளாவியரீதியிலுள்ள 430 இற்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் 600 முகவர்களுடன் வியாபித்துள்ள மிகவும்பாரிய விநியோக வலையமைப்பு மற்றும் அதற்கு ஈடாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள விற்பனைக்குப் பின்னரான பேணற்சேவை வலையமைப்பு மூலமாக தனது வாடிக்கையாளர்களுடன் தனது இடைத்தொடர்பாடல்களை சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனம் பேணி வருகின்றது.

வாடிக்கையாளர்கள் கொள்வனவுகளை மேற்கொள்கின்ற சமயங்களில் அவர்களுக்கு மகத்தான அளவில் நெகிழ்வுப்போக்கினை வழங்கும் வகையில்,வட்டியில்லா கொடுப்பனவுத் திட்டங்கள்,விசேட தள்ளுபடிகள்ரூபவ் பழையவற்றை ஒப்படைத்து புதியவற்றை கொள்வனவு செய்யும் திட்டங்கள்,இலவச சலுகைகள் மற்றும் கடனட்டை சலுகைகள் ஆகியவற்றை சிங்கர் வழங்கி வருகின்றது. 

இத்தகைய முயற்சிகளுக்காக எண்ணற்ற விருதுகளை நிறுவனம் வென்றுள்ளதுடன்,அவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல்,தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளாக நாட்டில் மக்களின் அபிமானத்தை வென்ற வர்த்தகநாமமாக சிங்கர் முதலிடத்தில் திகழ்ந்து வருகின்றது.

நுகர்வோர் மற்றும் தொழில்சார் சந்தைகளில் ஓடியோ, வீடியோ,கேம் (விளையாட்டு), தொடர்பாடல்கள், முதன்மை (key)சாதனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்து வழங்குவதில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனமாக Sony Corporation திகழ்ந்து வருகின்றது. இசை, படங்கள் மற்றும் கணினிப் பொழுதுபோக்கு,இணைய வர்த்தகங்களுடன் உலகிலேயே இலத்திரனியல் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் முன்னிலை வகிக்கின்ற என்று ஒரு தனித்துவமான ஸ்தானத்தை Sony கொண்டுள்ளது. 2018 மார்ச் 31 ஆம் திகதியில் முடிவடைந்த நிதியாண்டில் அண்ணளவாக 77 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற திரட்டிய வருடாந்த விற்பனையை Sony பதிவாக்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58