இலங்கையுடன் நல்லுறவை வலுப்படுத்த புட்டின் விருப்பம்

Published By: Rajeeban

12 Oct, 2018 | 12:24 PM
image

இலங்கையுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ரஸ்யா விரும்புகின்றது என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் தயான் ஜெயதிலக ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார்.அவ்வேளையே புட்டின் இதனை தெரிவித்துள்ளார்.

ரஸ்யா இலங்கையுடன்  பாரம்பரியமாக நல்லுறவை பேணி வருகின்றது என தெரிவித்துள்ள புட்டின் இலங்கையுடன் நெருங்கிய பொருளாதார உறவுகள் குறித்து ரஸ்யா ஆர்வமாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவஒத்துழைப்பு தொடர்பில் செப்டம்பரில் இரு நாடுகளும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டதையும் புட்டின் நினைவுகூர்ந்துள்ளார்.

இதேவேளை ரஸ்யாவிற்கான புதிய தூதுவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ள புட்டின் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற அடிப்படையில் நாடுகளின் இறைமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை ரஸ்யா மதிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையையும் ரஸ்யா பின்பற்றுகின்றது எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09