பாக்கிஸ்தானிற்கு எதிரான டெஸ்டில் போராட்ட குணத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா

Published By: Rajeeban

12 Oct, 2018 | 12:02 PM
image

பாக்கிஸ்தானிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களிற்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமுள்ளன.

பாக்கிஸ்தானிற்கு எதிரான துபாய் டெஸ்டில் தனது முதல் இனிங்சில் 202 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து அவுஸ்திரேலிய அணி கடும் விமர்சனங்களை சந்திந்திருந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய வீரர்கள் இரண்டாவது இனிங்சில் கடும் மன உறுதியை வெளிப்படுத்தி டெஸ்;டை காப்பாற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இனிங்சில் உஸ்மன்  கவாஜா 141 ஓட்டங்களை பெற்றார் டிம் பெய்ன் 61 ஓட்டங்களை பெற்று இறுதி வரை ஆட்டமிழக்காமலிருந்தார். ரிரவைஸ் ஹெட் 72 ஓட்டங்களை பெற்றார். இறுதி வரை போராடிய அவுஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 362 ஓட்டங்களை பெற்றது

 பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுகள் காரணமாக அனுபவமிக்க வீரர்களை இழந்துள்ள நிலையில் புதிய வீரர்களுடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இனிங்சில் வெளிப்படுத்திய மன உறுதியை ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டியுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர்கள் வெளிப்படுத்திய திறமையை பாராட்டியுள்ள அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்கெட் கொம். ஏயு அவுஸ்திரேலியாவின் புதிய யுகம் ஆரம்பம் என தெரிவித்துள்ளது.

முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக போரடினீர்கள் என அணி வீரர்களை பாராட்டியுள்ளார்.

இது எங்கள் அணியின் தொப்பியை அணிந்த எமது வீரர்கள் வெளிப்படுத்தியுள்ள மிகச்சிறந்த முயற்சியென மார்க்வோ தெரிவித்துள்ளார்.சிறந்த போராட்ட குணம் வெளிப்பட்டுள்ளது, கவாஜா சதம் மிகச்சிறந்த சதங்களில் ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மக்கில் டிம்பெய் அணித்தலைவராக சிறந்த இனிங்சை வெளிப்படுத்தினார் என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இது போட்டியை ஆட்டதொடரை கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றும் இனிங்ஸ் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவுஸ்திரேலிய  கிரிக்கெட்டிற்கு இது நல்ல செய்தி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21