பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு; நீதிபதி அறிவுரை 

Published By: Priyatharshan

16 Mar, 2016 | 10:32 AM
image

'உங்கள் இருவரின் நடவடிக்கைகளும் பெற்றோர் ஒருவருக்குரிய நடவடிக்கைகளாக நான் காணவில்லை.  உங்களின் பராமுகம் குற்றவாளிக்கு அத்தகைய குற்றத்தை செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு. நடந்த இந்த கொடூரத்துக்கு நீங்களும் பதில் சொல்ல வேண்டும்.' என நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பா ஜானகீ ராஜரத்ன கொலைச் எய்யப்பட்ட சேயாவின் பெற்றோரை நோக்கி தெரிவித்தார். 

அத்துடன் முழு பெற்றோர் சமூகத்தையும் விழித்த அவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விஷேட அறிவுரையினையும் வழங்கினார்.

சேயா படுகொலை விவகாரத்தில் சமன் ஜயலத் என்ற பிரதிவாதியை குற்றவாளியாக கண்ட நீதிபதி தண்டனை வழங்க முன்னர் இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் கருத்து கூற இடமளித்தார். 

இதனையடுத்து தண்டனை அறிவிப்பை வெளியிட முன்னர் அவர் சேயாவின் தாயையும் தந்தையும் மன்றின் முன்னாள் அழைத்தார். 

மன்றின் பின் வரிசை ஆசனமொன்றில் அமர்ந்திருந்த அவ்விருவரும் மன்றின் முன்னால் வந்து கைகட்டி நின்றனர்.  

இதன் போது நீதிபதி முழு பெற்றோருக்கும் எனக் கூறி கடுமையான எச்சரிக்கையுடன் சேயாவின் பெற்றோரைப் பார்த்தவாறு இப்படி கருத்துரைத்தார்.

' உங்கள் இருவரின் செயற்பாடுகளும் எந்தவகையிலும் பெற்றோர் ஒருவருக்கு உகந்ததல்ல. குற்றவாளி இந்த குற்றத்தில் ஈடுபட உங்கள் கவனயீனமும் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. மன்றில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் அதனை நாம் தெளிவாக விளங்கிக்கொண்டோம்.

சுதந்திரம், சூழல் ஆகியவற்றை அறிந்து பெற்றோர் தமது பிள்ளைகள் விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்கு பாரிய பொறுப்பு உள்ளது.

வீட்டினுள்ளும் வீட்டுக்கு வெளியேயும் பாதுகபபற்ற நிலைமைகள் தற்காலத்தில் உரிவாகியுள்ளன. இதனை நாம் அன்றாடம் காண்கிறோம்.

இந்த சம்பவத்தை எடுத்துப் பாருங்கள். பெற்றோர் முழுமையக கவனயீனமாக இருந்துள்ளனர். அதனால் அதனை குற்றவாளி வாய்ப்பாக்கிக் கொண்டுள்ளார்.

தாய் என்ற வார்த்தைக்கு அர்த்தம் ஆழமானது. அதனை விபரிக்க முடியாது. ஆனாலும் இன்று  பலர் இரவு 10 மணி வரையிலும் தொலைக் காட்சியில் சின்னத் திரைகளில் மூழ்கிவிடுகின்றனர். இதன் போது பிள்ளைகள் தொடர்பில் அவர்கள் பராமுகமாக இருக்கின்றனர். இத்தகைய சந்தர்ப்பங்கள் இலக்கை அடைய காத்திருக்கும் வெளியாருக்கு சந்தர்ப்பமாகிவிடுகின்றது.

இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது சாட்சியங்கள் ஊடாக தெளிவு. இதனை பாடமாக கொண்டு பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து செயற்பட வேண்டும்.

பெற்ரோர்கள் பிள்ளைகள் விடயத்தில் இவ்வாறு பராமுகமாக இருந்தால் இத்தகைய சம்ப்வங்களின் போது ஒரு வகையில் அவர்களும் குற்றவளிகளே. எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04