(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரசியல் அமைப்பு பேரவையின் மூலமான பதவி நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்தும் அரசியல் அமைப்பு பேரவையின்  சிவில் பிரதிநிதிகள் நியமனம் குறித்தும் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. 

அரசியல் அமைப்பு பேரவையில் நீதி அமைச்சர் அங்கம் வகிக்கும் நிலையில் எவ்வாறு பிரதம நீதியரசர் நியமிக்கப்படுவார். இதில் சுயாதீனம் இல்லை எனவும் சபையில் பொது எதிரணி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

எதிர்க்கட்சி தொடர்ச்சியாக குழப்பத்தை விளைவித்த போதும் எதிர்ப்பை மீறி  சபையில் புதிய நியமனத்துக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சிவில் உறுப்பினர்கள் மூவரின் நியமனம் உறுதியாக்கப்பட்டது. 

அரசியலமைப்புச் சபைக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பேராசிரியர் ஜயனாத் தனபால, ஜாவிட் யூசுப், என். செல்வகுமரன் ஆகியோரை நியமிப்பதற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.