இந்து சமுத்திரம் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம்

Published By: Vishnu

11 Oct, 2018 | 05:08 PM
image

(நா.தனுஜா)

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாடு இன்று வியாழக்கிழமை அலரிமாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள பலம்வாய்ந்த நாடுகள் கடற்பிராந்திய அடிப்படையில் பிற நாடுகளை ஆக்கிரமிக்காதவாறு அனைத்து இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கிடையில் கலந்துரையாடல் மூலமான புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வதே இம் மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.

மேலும் "எமது எதிர்காலத்தை வரையறுத்தல்" எனும் தொனிப்பொருளில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அடிப்படை குறிப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், சமுத்திர விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் பீற்றர் தொம்சன் சிறப்புரையாற்றினார்.

அத்துடன் இந்திய பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண், ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் பிரதான பிரதி உதவிச் செயலாளர் எலிஸ் ஜீ.வெல்ஸ், சீன வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லைத் திணைக்களம் மற்றும் சமுத்திர விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் யி சியான்லியாங், தென்னாபிரிக்காவின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான குழுவின் தவிசாளர் அனில் சூக்லால் ஆகிய பல முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51