ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 47 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-10 போட்டிகள் இன்று ஆரம்பமாகின.

இதில் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.