பொகவந்தலாவ தோட்ட பகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் குழிகள் மூடப்பட வேண்டும்:மக்கள் கோரிக்கை

Published By: R. Kalaichelvan

11 Oct, 2018 | 11:02 AM
image

பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் குழிகள் மூடப்படாமல் பேக்கோ இயந்திரங்களை கொண்டு சென்றமையால் மக்கள் எதிர்பு தெரிவித்துள்ளனர்.தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையினால் பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதியில் முன்னெடுக்கபட்டு வந்த மாணிக்கல் அகழ்வினால் குறித்த பகுதி நீர் தேக்கங்களாக காட்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கானபடுகின்ற பாரிய மாணிக்ககல் சுரங்க குழிகளை மண்யிட்டு முடப்போவதாக கூறி பேக்கோ இயந்திரங்களை கொண்டு வந்து சுமார் 08 மாதகால மாக நிறுத்திவைத்து விட்டு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குறித்த இயந்திரங்களை கொண்டு சென்றமை தொடர்பில் பிரதேசமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்தேசிய இரத்தினகல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் அனுமதியோடு சுமார் முன்று வருடங்களும் இரண்டு மாதங்கள் பொகவந்தலாவ பெறுந்தோட்ட கம்பணிக்கு சொந்தமான கானியில் மாணிக்கல் அகழ்வினை மேற்கொண்டு வந்தபோதிலும்  மாணிக்கல் அகழ்விற்கான ஒப்பந்தம் நிறைவடைந்து ஒருவருடங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் காணபடுகின்ற மாணிக்ககல் சுரங்க குழிகளை இதுவரையிலும் மூடப்படாமல் கானபடுகின்றமையால் அப்பகுதியில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறதுகுறித்த பகுதியில் அகழப்பட்டபாரிய குழிகள் மூடப்படாமையினால் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர்கள் பலாங்கொடை, பின்னவல, மாரத்தென்ன போன்ற பகுதிக்கு சென்று கால்நடைகளுக்கான புற்களை வாகனத்தின் முலம் பொகவந்தலாவ ஜெப்பல்டன் தோட்டபகுதிக்கு கொண்டு வருவதாக இம் மக்கள் குறிப்பிடுகின்றனர்.பொகவந்தலாவ ஜெப்பல்ட்டன் தோட்டபகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் சுரங்க குழிகள் முடப்படவேண்டுமென பலமுறை அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அதன் இனைதலவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்னண் மற்றும் முன்னால் மத்திய மகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் அகியோர் வழியுருத்தி வந்தபோதிலும் குழிகளை மூடிதருவதாக உறிய அதிகாரிகள் வாக்குருதி வழங்கபட்டனர் ஆனால் இதுவரையிலும் இந்த சுரங்க குழிகள் முடப்படவில்லை.நாட்டில் தொடரும் சீர்ரற்ற காலநிலை காரணமாக தொடரும்  குழிகளில் மழை நீர் நிரம்பி கேசல்கமுவ ஒயாவில் கலக்கபடுகின்றமையால் கேசல் கமுவஒயா நீர் மாசடைவதாகவும் தெரிவிக்கபடுகின்றது. 

எனவே குறித்த பகுதியில் அகழப்பட்ட மாணிக்ககல் குழிகளை உடனடியாக மூடிதருவதற்கு மலையக தலைமைகள் நடவடிக்கை எடுகக்பட வேண்டுமென பிரதேசமக்கள் கோறிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55