கதிர்காம குளத்தில் முதலைகள் அதிகரித்து வருவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு யாத்திரிகர்களை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

கதிர்காமம் செல்லும் பக்தர்கள் மாணிக்க கங்கையிலும் ஏனைய குளங்களிலும் குளித்து வருகின்றனர். சிலர் தேவையற்ற விதத்திலும் தகாத இடங்களிலும் குளிக்கச் சென்று முதலைக் கடிக்கு இரையாகுவதால் குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் நீராடுமாறு கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பத் ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதேவேளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.