கம்பளை, அம்பகமுவ வீதியில் இன்று காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ ஏற்பட்டுள்ளது.

மின்சார தடை காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கியில் (Generator) ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் நகர்வாசிகள் சேர்ந்து தீ கடைதொகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தியுள்ளனர்.

குறித்த இடத்துக்கு தீயணைப்பு படையினர் வருகைதர தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)