சீஷெல்ஸ் - இலங்கை உறவுகள் பலமாக வளர்ச்சியடைந்துள்ளது

Published By: Daya

10 Oct, 2018 | 01:14 PM
image

சீஷெல்ஸ் - இலங்கை உறவுகள் தற்போது பலமாக வளர்ச்சியடைந்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் இந்த ஒத்துழைப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள் இரண்டு நாட்டினதும் மக்களின் நலன்களுக்கு காரணமாக அமையும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சீஷெல்ஸில் வாழும் இலங்கையர்களுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சீஷெல்ஸில் பல்வேறு துறைகளில் தொழில் செய்கின்ற இலங்கையைச் சேர்ந்த தொழில் வல்லுனர்கள் மற்றும் கல்வி கற்கின்ற மாணவர்கள் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் புதிய பொருளதார, வர்த்தக உறவுகளை ஏற்படுத்தும் வகையில் தனது இரண்டு நாள் அரசமுறை பயணத்தின்போது பல்வேறு முக்கிய தீர்மானங்களை  மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அனைத்து நாடுகளுடனும் உறவுகளை கட்டியெழுப்பி நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்காக நன்மைகளை பெற்றுக்கொள்வதே தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சீஷெல்ஸ் நாட்டின் சர்வதேச மாநாட்டு மத்திய நிலையத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. சீஷெல்ஸ் நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் ஜனாதிபதி இதன்போது ஆரம்பித்து வைத்தார்.

சீஷெல்ஸ் பௌத்த சங்கத்தின் இணையத்தளமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 30 வருட காலத்தில் சீஷெல்ஸில் வாழ்ந்து வருவதுடன், இலங்கைக்கும் சீஷெல்ஸுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்த இலங்கை தொழில் வல்லுனர்களை பாராட்டி ஜனாதிபதியினால் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

ஜனாதிபதியின் சீஷெல்ஸ் விஜயத்தை நினைவுகூரும் வகையில் சீஷெல்ஸிலுள்ள இலங்கை ஒன்றியத்தினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டது. 

அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, இராஜாங்க அமைச்சர்களான பியசேன கமகே, மொஹான் லால் கிரேரு ஆகியோரும் சீஷெல்ஸிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டிகிரி ஹேரத் குணதிலக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33