பாதியா டிரேடிங் குரூப்க்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருது வழங்கல் விழா

Published By: R. Kalaichelvan

10 Oct, 2018 | 12:46 PM
image

நாட்டில் அதிகளவு அச்சு இயந்திரங்களை விற்பனை செய்வதில் முன்னோடி நிறுவனமாக திகழும் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட்டுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் ,தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதை,நிறுவனத்தின் ஸ்தாபகர் பாதிய உடுமலகல பெற்றுக் கொண்டார்.

கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வைரூபவ் என்டர்பிரைஸ் ஏசியா ஏற்பாடு செய்திருந்தது. தொழில்முயற்சியாண்மை சிறப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில் பிராந்திய மட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் தொழிற்துறை மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

மலேசியா, இந்தோனேசியா,புருனெய்,சிங்கப்பூர், ஹொங்கொங், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு தொடராக முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன்,சுற்றுலா அபிவிருத்தி,கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க,என்டர்பிரைஸ் ஏசியாவின் தலைவர் டதோ வில்லியம் என்ஜி மற்றும் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1993 இல் நிறுவப்பட்ட பாதியா குரூப்,பரிபூரண அச்சிடல் தீர்வுகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது. 

சந்தை வளர்ச்சி மற்றும் வாய்ப்புகளை இனங்கண்டு, தனது செயற்பாடுகளை பன்முகப்படுத்தி அச்சிடலுக்கு அப்பால் சென்று, பொதியிடல்,சுகாதார பராமரிப்பு,சரக்கு கையாளல்,விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் அபிவிருத்தி போன்றவற்றிலும் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. 

இந்த குழுமத்தில் கொமர்ஷல் பிரின்டிங் அன்ட் பகேஜிங் லிமிட்டெட்,பாதியா ட்ரான்ஸ்போர்டர்ஸ் லிமிட்டெட்,பாதியா என்ஜினியரிங் அன்ட் மெனுபெக்ஷரிங் லிமிட்டெட்,மெட்ரோ ஹெல்த் கெயார் லிமிட்டெட்,சிபிபி டிஜிட்டல் லிமிட்டெட் போன்றன அடங்கியுள்ளன.

இந்த பெருமைக்குரிய விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் பாதியா குரூப் ஸ்தாபகரும் முகாமைத்துவ பணிப்பாளருமான

பாதிய உடுமலகல கருத்துத் தெரிவிக்கையில்,“ஆசிய பசுபிக் தொழில்முயற்சியாண்மை 2018 விருதுகள் வழங்கலில்

தொழிற்துறை மற்றும் வணிக தயாரிப்புகள் பிரிவில் எனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமையடைகிறேன். இலங்கையின் அச்சிடல் துறையின் வளர்ச்சிக்கும்,தென் கிழக்காசிய பிராந்தியத்தில் அச்சிடல் மையமாக இலங்கையை ஊக்குவிக்கின்றமைக்காகவும் என்னை கௌரவித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

எமது சகல பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோரால் பகிர்ந்து கொள்ளப்படும் விருதாக இது அமைந்துள்ளது”என்றார்.

உலகப் புகழ்பெற்ற Heidelberg அச்சிடல் இயந்திரங்களில் பாதியா டிரேடிங் கம்பனி பிரைவட் லிமிட்டெட் நிபுணத்துவம் பெற்றுள்ளது. 

நாட்டில் பெருமளவு ர்நனைநடடிநசப அச்சியந்திரங்களை நிறுவியுள்ளதுடன், புதுப்பிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே உரிமை கொள்ளப்பட்ட  Heidelberg இயந்திரங்களை விநியோகிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது.Polar, Line O Matic, Stahl, Peony,Bromide, Proteck, Sujata, Pressline India போன்ற பல வர்த்தக நாமங்களுடனும் நிறுவனம் செயலாற்றி வருகிறது.

தனது இரு நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலைகளில் 200 நூறுக்கும் அதிகமான ஊழியர்களை பாதியா குரூப் கொண்டுள்ளது. 

சமூக ஈடுபாடு தொடர்பில் நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன்,சமூக செயற்பாடுகள்,பாதுகாப்பு மற்றும் சூழல் தரங்கள் போன்றவற்றிலும் பங்களிப்பு செலுத்தியுள்ளது. தொழிற்சாலைகளுக்கான புத்தாக்கமான மீள்சுழற்சி முறைகள், ஊழியர்கள் மத்தியில் அறிவு பகிர்வு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கல் போன்றன இதில் அடங்குகின்றன. 

உயர் தொழிற்துறை நியமங்களை கடப்பதற்காக நிறுவனம் தொடர்ச்சியாக செயலாற்றி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58