முதல் டெஸ்டிலேயே ஆறு விக்கெட்களை வீழ்த்தினார் 33 வயது பிலால் அசீவ்

Published By: Rajeeban

10 Oct, 2018 | 12:07 PM
image

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆறு விக்கெட்களை வீழ்த்தியுள்ள பாக்கிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் பிலால் அசீவ் இந்த டெஸ்டை வெல்வதற்கு உதவுவதன் மூலம் தனது முதலாவது டெஸ்டை மறக்க முடியாததாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார்

பாக்கிஸ்தான் அணிக்காக துபாயில் தனது முதலாவது டெஸ்டை விளையாடிவரும் 33 வயது ஓவ்ஸ்பின்னர் அசீவ் முதல் இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

நான் ஒரு நாள் அணிக்காக 2015 இல் விளையாடினேன் எனினும் மூன்று வருடங்களிற்கு பின்னரே எனக்கு டெஸ்ட் வாய்ப்பு கிடைத்தது என குறிப்பிட்டுள்ள அவர் நான் பாக்கிஸ்தானின் தேசிய கிரிக்கெட் அகடமியில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்

முதல் இனிங்சில் ஆறு விக்கெட்களை வீழ்த்தியமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன் பாக்கிஸ்தானின் வெற்றிக்கு உதவுவதன் மூலம் இந்த டெஸ்டை மறக்க முடியாததாக மாற்ற முயல்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் நீண்ட காலமாக பந்து வீசி வருகின்றேன் இதன் காரணமாக எப்படி பந்து வீசவேண்டும் என்ற அனுபவம் எனக்குள்ளது இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமானது என்பதை கணித்து அதற்கேற்ப பந்து வீசினேன் என அவர் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் என்பதால் அழுத்தங்கள் இருந்தன இதனால் நான் ஆரம்ப ஓவர்களை சிறப்பாக வீசவில்லை என தெரிவித்துள்ள பிலால் அசீவ்; எனினும்எனது அணி வீரர்கள் எனக்கு நிறைய ஆதரவை வெளியிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07