நயன்தாரா முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

நடிகை நயன்தாரா முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஐரா ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் லேடி சுப்பர் ஸ்டார் என்ற அடையாளத்துடன் திகழ்பவர் நடிகை நயன்தாரா. இவர் கதையின் நாயகியாக நடித்த கோலமாவு கோகிலா வெளியாகி, ஐம்பதாவது நாள் கொண்டாடும் இந்த தருணத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

 ‘ஐரா’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கி பிரபலமானவரும், ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ’ என்ற படத்தை இயக்கியவருமான கே. எம். சர்ஜுன் இயக்குகிறார். இதில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.