DIMO Academy for Technical Skills (DATS) கற்கைமையத்தின் 27 ஆவது பட்டமளிப்பு வைபவம் நிறுவனத்தின் அதிநவீன Mercedes Benz மையமான DIMO 800 இல் அண்மையில் இடம்பெற்றிருந்தது. DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே, DIMO குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான கஹநாத் பண்டிதகே, DIMO  நிறுவனத்தின் பணிப்பாளர்கள்,முகாமைத்துவ அதிகாரிகள், பெற்றோர் மற்றும் DATS பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

DATS கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய கற்கைமையங்களிலிருந்து 26 மாணவர்கள் மோட்டார் வாகன எந்திரவியல் தொழில்நுட்பவியலாளர்களாக

(Automobile Mechatronics Technicians) பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளனர். 

கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு கற்கைமையங்களும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவால் (Tertiary and Vocational Education Commission - TVEC)அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன்,Daimler AG இனால் அறிமுகம் செய்யப்பட்ட தற்போதைய காலத்திற்கு உரிய,மாணவர்களை மையமாகக் கொண்ட சுய-கற்றல் எண்ணக்கருவை பின்பற்றுகின்றன.

மோட்டார் வாகன எந்திரவியலில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்படுகின்ற ஒரு தகைமையாக பிரிவு “A”இன் கீழ் ஜேர்மன் வர்த்தக சம்மேளனத்தால் DATS இற்கு அண்மையில் சான்று அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன்,பிராந்தியத்தில் இத்தொழிற்துறையில் முதன்முதலாக DATS இற்கே இது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள் கூறுகையில், “எமது நாட்டின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதில் தொழிற்கல்வி பயிற்சி முக்கிய பங்கு வகிக்கின்றது. 

இலங்கை இளைஞர்கள் தொழிற்சந்தையில் போட்டித்திறன் கொண்டவர்களாக மாறுவதற்கு சரியான திறன்களை விருத்தி செய்து அவர்களுக்கு வலுவூட்ட வேண்டியது முக்கியமாகும். தொழிற்துறையில் தரமான தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்க வேண்டிய தேவையை DIMO எப்போதும் இனங்கண்டு அங்கீகரித்துள்ளது. 

இத்தேவையை தீர்த்து வைக்கவே DATS ஸ்தாபிக்கப்பட்டது,” என்று குறிப்பிட்டார்.

1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட DATS,Daimler AGஇன் ஒத்துழைப்புடன்,தேசத்திலுள்ள இளைஞர்,யுவதிகளுக்கு உயர் தரத்திலான தொழிற்பயிற்சியை வழங்கி வந்துள்ளது. 

DATS  ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு அது பயிற்சியை இலவசமாக வழங்கி வந்துள்ளதுடன்ரூபவ் இலங்கையிலுள்ள வேறு தனியார் நிறுவனங்கள் எவற்றாலும் இது வரை மேற்கொள்ளப்பட்டிருக்காத அளவில் பாரியதொரு முதலீடாகவும் அமையப்பெற்றுள்ளது. 

DATS இல் பட்டப்படிப்பை பூர்த்தி செய்கின்றவர்கள் முன்னணி மோட்டார் வாகன பொறியியல் நிறுவனமான DIMOஇல் இணைந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.

இலங்கையில் மோட்டார் வாகன எந்திரவியல் (Automobile Mechatronics) கற்கைநெறியை வழங்கும் ஒரேயொரு கற்கைநிலையமாக DATS திகழ்ந்து வருகின்றது. 

மாணவர்கள் எந்திரவியல்ரூபவ் மின்னியல்,இலத்திரனியல் துறைகளில் கற்கைநெறிகளை முன்னெடுப்பது மட்டுமன்றி,நவீன மோட்டார் வாகனம் சார்ந்த தகவல் தொழில்நுட்ப அம்சங்களையும் ஒரே துறையின் கீழ் முன்னெடுக்க முடியும். 

நவீன மோட்டார் வாகனங்களில் வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற தொழில்நுட்பங்களை உள்வாங்குவதற்கு இது பட்டதாரிகளுக்கு இடமளிக்கின்றது. 

கேள்வித்திறன் மிக்க இப்பாடநெறியை மேற்கொள்வதற்கு மிகவும் தகைமை கொண்ட விண்ணப்பதாரிகளை தெரிவு செய்வதற்காக நுழைவுப் பரீட்சை,மதிப்பீடுகள் மற்றும் நேரடி நேர்காணல் அடங்கலாக கடுமையான தெரிவு நடைமுறை பின்பற்றப்படுகின்றது. 

பயிற்சிநெறிகள் அனைத்தும் வெலிவேரியவில் அமைந்துள்ள, அனைத்து உபகரண வசதிகளையும் கொண்ட  அதிநவீன பயிற்சி மையத்தில் உயர் மட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. 

Mercedes-Benz இன் தலைமை நிறுவனமான ஜேர்மனியின் Daimler AG உடன் இணைந்து இக்கற்கைநெறிகள் நடாத்தப்படுகின்றன.