படையினர் தயார் நிலையில்

Published By: Vishnu

09 Oct, 2018 | 01:06 PM
image

நாட்டின் பல பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா காலி மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 144 பகுதிகளிலேயே 1200 இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இராணுவத்தின் 14, 58 மற்றும் 53 ஆவது படைப்பிரிவுகளை வெள்ள அனர்த பணிகளுக்காக சேவையில் அமர்த்தப்பட்டுள்ளன.

இதேவேளை களனி, உடுகம, பிட்டிகல, நாகொட, வெலிபென்ன, ஹொரவல, புலத்சிங்கள, பலிங்கநுவர, யட்டியாதோட்ட, புத்தளம் மற்றும் கௌனிமுல்ல ஆகிய பகுதிகளில்ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை கடந்த 24 மணித்தியாலங்களில் இராணுவத்தினர் உதவியுடன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளில் இராணுவத்தினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளுக்காக  படகுகள், இராணுவ கவச வாகனங்கள், இராணுவ இரும்பு குதிரை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை இராணுவத்தினர் நிறைவேற்றி வருவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01