சிங்கப்பூரில் சிறகுகளும் சீறிப்பாய்ந்த ஓர் இறகுப் பந்தாட்ட போட்டி

Published By: Digital Desk 4

08 Oct, 2018 | 06:54 PM
image

அண்ணாமலைப் பல்கலைக்கழக சிங்கப்பூர் கிளையின் இறகுப் பந்தாட்ட போட்டி

சிங்கப்பூரில் செயற்பட்டுவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) இம்மாதம் 07 ஆம் திகதியன்று யூனிட்டி உயர்நிலைப் பள்ளியின் உள்விளையாட்டரங்கில் மிகச் சிறப்பான முறையில் தனது உறுப்பினர்களுக்கான (பட்மின்டன்) இறகுப்பந்தாட்ட போட்டியினை தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது.

ஆண்களுக்கு இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவுகளிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒற்றையர் பிரிவிலும் போட்டிகள் நடைபெற்றன. 

அறுபதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த போட்டியில் உற்சாகமாக கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

வாழ்க்கையிலும் விளையாட்டிலும் பாதுகாப்பே பிரதானம் என்பதால் இடைவேளை நேரத்தில் முதலுதவி செய்வது பற்றிய விளக்கப்பாடத்திற்கு தனியார் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்து முன்னெடுக்கப்பட்டது. 

பங்கேற்ற அனைவருக்கும் தங்கள் வாழ்நாட்களில் மற்றவர்களுக்கான அவசர காலங்களில் உதவும் ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

இந்த போட்டியினை செயலாளர் திரு ரா. சங்கர் (1989 C), இளையோர் குழுத் தலைவர் திரு.நெடுஞ்செழியன் (1990 C&S) மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு R. கார்த்திக் (2008 Phy Ed )  உடன் மூத்த உறுப்பினர் திரு.கருணாநிதி (1994 M&P),  திரு க. முரளி (2007 M), திரு ஜெ. கார்த்திக் (2007 C&S) மற்றும் திரு N. கார்த்திக் (2007 M)  ஆகியோர் வெகு  சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22