வல்வெட்டித்துறை தூபி அமைப்பு ; பொலிஸாரின் தடையுத்தரவு கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Published By: Vishnu

08 Oct, 2018 | 04:45 PM
image

(எம்.நியூட்டன்)

தமிழிழ விடுதலைப் புலிகளின் குமரப்பா-புலேந்திரன் உள்ளட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறையில் தூபி அமைப்பதற்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரினால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிவான் நிராகரித்துள்ளார்.

தமிழிழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா புலேந்திரனின் உள்ளிட்டவர்களின் நினைவாக வல்வெட்டித்துறை தீருவிலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபியை புனரமைப்பதற்கு வல்வெட்டித்துறை நகர சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய கடந்த 5 ஆம் திகதி அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது பொலிஸார் நீதிமன்றில் விண்ணப்பமொன்றை தொடர்ந்திருந்தனர். அதாவது இதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரியே இவ்விண்ணப்பத்தை செய்திருந்த நிலையில் குறித்த நகர சபைத் தலைவரையும் நேற்று ஆஜராகுமாறு நீதிமன்றம் அறிவித்ததற்கமைய நகரசபைத் தலைவரும் ஆஐராகியிருந்தார்.

இதன் போது சட்டத்திற்கு முரணாக பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலே இத் தூபி அமைக்கப்படுவதால் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென பொலிஸார் கோரியிருந்த நிலையில் அது சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவே நடைபெறுவதாக சட்டத்தரணி சிறிகாந்தா மன்றில் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து இன்றையதினம் இதற்கான கட்டளையிடுவதற்காக நிதிவான் வழக்கை ஒத்தி வைத்திருந்தார் இதற்கமைய நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே பொலிஸாரினால் தடைவிதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிவான் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19