மகிந்தவை சந்திக்கவேண்டும் என சிறிசேனவே வேண்டுகோள்விடுத்தார்- பொது எதிரணி

Published By: Rajeeban

07 Oct, 2018 | 08:07 PM
image

முன்னாள் அமைச்சர் எஸ்பிதிசநாயக்கவின் வீட்டில் முன்னாள் ஜனாதிபதியை சந்திப்பதற்கான விருப்பத்தை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவே வெளியிட்டார் என பொது எதிரணியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் குறிப்பிடவிரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொழும்பு டெலிகிராபிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

பல முக்கியமான விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக மகிந்த ராஜபக்சவை சந்திக்க விரும்புவதாக சிறிசேனவே எஸ்பி திசநாயக்க மூலம் செய்தியனுப்பினார் என பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி முதலில் சிறிசேனவை சந்திக்க விரும்பவில்லை எனினும் சிறிசேன தொடர்ந்தும் வேண்டுகோள் விடுத்ததினால் மகிந்த ராஜபக்ச சந்திப்பிற்கு இணங்கினார் எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியுள்ளது போன்று இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனரா என்பது எனக்கு தெரியாது ஆனால் பொது எதிரணியுடன் தான் எவ்வாறு எதிர்காலத்தில் இணைந்து செயற்படவேண்டும் என்பதை அறிவதற்கு சிறிசேன விரும்பினார் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கவலையடைந்தவராக சிறிசேன காணப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஐக்கியதேசிய கட்சி அரசாங்கத்தில் நீடிக்கின்ற வரையில் அதனுடன் எந்த இணக்கப்பாட்டிற்கும் வரமுடியாது என்பதே எங்களின் நிலைப்பாடு எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற  உறுப்பினர் குறிப்பிட்டார் என கொழும்பு  டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறிய பின்னரே நாங்கள் இது குறித்து முடிவெடுக்க முடியும் நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை எனவும் பொது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59