பெர்­முடா முக்­கோண மர்­மம் வெளிச்சத்துக்கு 

Published By: Raam

15 Mar, 2016 | 10:48 AM
image

அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பெர்­முடா முக்­கோணம் (சாத்­தானின் முக்­கோணம்) என அழைக்­கப்­படும் பிராந்­தி­யத்தில் பய­ணிக்கும் கப்­பல்­களும் அதற்கு மேலாக பறக்கும் விமா­னங்­களும் மர்­ம­மான முறையில் காணா­மல்­போ­வது நீண்ட கால­மா­கவே எவரும் அறி­யாத புதிராக இருந்து வரு­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி பெர்­முடா முக்­கோணப் பிராந்­தி­யத்தில் சமுத்­தி­ரத்தின் அடியில் பாரிய எரி­மலை வாய்கள் இருப்­பதை கண்­டு­பி­டித்­துள்­ள­தா­கவும் அந்தப் பிராந்­தி­யத்தில் கப்­பல்­களும் விமா­னங்­களும் மர்­ம­மாக மறை­வ­தற்கு மேற்­படி எரி­மலை வாய்­களே காரணம் என நம்­பு­வ­தா­கவும் விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

இயற்கை எரி­வாயு வளம் மிக்க நோர்­வேயின் கடற்­க­ரைக்கு அப்பால் சமுத்­தி­ரத்தில் அரை மைல் அக­லமும் 150 அடி ஆழமும் கொண்ட மெதேன் வாயுவால் நிரம்­பிய பாரிய எரி­மலை வாய்கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக நோர்­வேயின் ஆர்டிக் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் கூறு­கின்­றனர்.

மேற்கு மத்­திய பாரென்ட்ஸ் கடலின் கீழுள்ள பெருந்­தொ­கை­யான எரி­மலை வாய் கள் கார­ண­மாக அவற்­றி­லி­ருந்து அள­வுக்­க­தி­க­மான மெதேன் வாயு வெளி­யி­டப்­ப­டு­வதால் அந்தப் பிராந்­தி­யத்­தி­லான சமுத்­திர மேற்­ப­ரப்பு சூடாகி அந்த மேற்­ப­ரப்­பிலும் அதற்கு மேலும் பய­ணிக்கும் பொருட்­கள் சமுத்­திர அடித்­த­ளத்தை நோக்கி உள்­வாங்­கப்­ப­டு­வ­தாக அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பெர்­முடா முக்­கோணப் பிராந்­தியம், வட அத்­தி­லாந்திக் சமுத்­தி­ரத்தில் பிரித்தானியா வின் கடலுக்கு அப்பாலான பிராந்தியங்களி லிருந்து அமெரிக்க புளோரிடா கடற்கரை மற் றும் புயர்ரோ றிக்கோ வரையான பிரதேசத்தை உள்ளடக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26