கொங்கோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து ; 50 பேர் தீக்கரை - 100 க்கும் மேற்பட்டோர் காயம்

Published By: Vishnu

07 Oct, 2018 | 10:55 AM
image

கொங்கோ நாட்டின் மபுபா கிராமத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கர் லொறியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உடல் கருகி உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

கொங்கோவின் கிங்சு நகரிலிருந்து  124 கி.மீ. தொலைவில் உள்ள கிப்சாசாவில் இருந்து சுமார் 200 மைல் தொலைவில் உள்ள மபுபா கிராமத்தில் ஏரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கர் லொறியொன்று பஸ்ஸுடன் மோதியுள்ளது.

இதனால் எரிபொருள் ஏற்றிச் சென்ற டாங்கரிலிருந்து எரிபொருள் கசிவு ஏற்படத் தொடங்கியபோது, கிராமவாசிகள் அதை சேகரிக்க விரைந்து சென்றனர். இதன் பின்னரே மேற்படி வாகனம் வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது.

விபத்தில் சிக்குண்டு 50 பேர் பரிதாபகரமாக உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டோர் தீக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலரது நிலைமைகள் கவலைக்கிடமாகவுள்ளதாகவும், உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33