நவலோக அக்ரி (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தில் சிறப்பாக செயலாற்றிய விநியோகஸ்த்தர்களுக்கு, இந்தியாவின் சொனாலிகா தொழிற்சாலைக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

சிறந்த முதல் பத்து விநியோகஸ்த்தர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ட்ராக்டர்கள் உற்பத்தி நிறுவனமான இன்டர்நஷனல் ட்ராக்டர்ஸ் லிமிட்டெட் (ITL)இன் சொனாலிகா ட்ராக்டர்ஸ் தொழிற்சாலையை பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் விவசாயத்துறையில் புகழ்பெற்ற ட்ராக்டர்கள் நாமமாக சொனாலிகா திகழ்கிறது.

ஐந்து நாட்கள் வரை நடைபெற்ற இந்த அறிவுபூர்வமான அம்சங்கள் நிறைந்த சுற்றுலாவின் போது, ட்ராக்டர்களின் வினைத்திறன் வாய்ந்த பாவனையின் மூலமாக விவசாய உற்பத்திகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் பங்குபற்றுநர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. 

2014 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட நவலோக அக்ரி நிறுவனத்தின் மூலமாக, விவசாயத்துறைக்கு சாதனங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல்கள் தொடர்பில் சகாயமான தீர்வுகள் வழங்கப்படுகின்றன. 

இந்த நிறுவனத்தின் உற்பத்தித் தெரிவுகளில் ட்ராக்டர்கள், சோளம் கதிரடிக்கும் கருவி, வலு உழவர் இயந்திரங்கள், மினி உழவர் இயந்திரங்கள், டீசல் மற்றும் பெற்றோல் என்ஜினில் இயங்கும் நீர் பம்பிகள், ப்ரஷ் கட்டர்கள், ஸ்பிரேயர்கள் மற்றும் பனித் தூவான்கள் போன்றன உள்ளடங்கியுள்ளன.

இலங்கையில் சொனாலிகா ட்ராக்டர் வகைகளின் பிரத்தியேக விநியோகஸ்தரான நவலோக அக்ரி, உள்நாட்டு விவசாய சமூகத்துக்கு சிறந்த உதவிகளை வழங்க தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இந்த முக்கியத்துவம் வாய்ந்த துறையின் வினைத்திறனை மேம்படுத்தும் வகையிலும் செயலாற்றி வருகிறது.

சோனாலிகாவின் 50 HP தெரிவுகள் விவசாயிகளுக்கும் நிர்மாணத்துறைக்கும் பொருத்தமானவையாக அமைந்துள்ளன. இந்த பங்காளர்களுக்கு தமது சொனாலிகா ட்ராக்டர்களுக்கு உச்ச அனுகூலங்களை பெற்றுக் கொள்வதற்கு நவலோக அக்ரி உதவிகளை வழங்குகிறது.

50 HP சோனாலிகா ட்ராக்டர் மூலமாக அதிகளவு எரிபொருள் சிக்கனம் பேணப்படுகிறது, குறைந்த பராமரிப்பு செலவுகள் தேவைப்படுகிறது. மேலும் நவலோக அக்ரி மூலமாக மூன்று ஊழியர் கட்டணமின்றிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

விவசாய சமூகத்துக்கு உயர் மட்ட சேவைகளை வழங்குவதற்கான தமது அர்ப்பணிப்பு என்பதன் பிரகாரம், நவலோக அக்ரி, நாட்டினுள் மூன்று சேவை நிலையங்களை நிறுவியுள்ளது. பொலன்நறுவை, பரந்தன் மற்றும் வெல்லவாய ஆகிய நகரங்களில் இந்த நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 

சொனாலிகா ட்ராக்டர்கள் உரிமையாளர்களுக்கு உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கும், இலகுவாக பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்கும் வசதிகளை நவலோக அக்ரி பெற்றுள்ளது. சாதனங்களின் மீள் விற்பனை பெறுமதியை அதிகரிப்பதற்கும் பங்களிப்பு வழங்குகிறது.