கமநல காப்புறுதி சபை அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறப்பு

Published By: Daya

06 Oct, 2018 | 12:52 PM
image

கிளிநொச்சி பழையய மாவட்ட செயலக வளாகத்தில் விவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.

 குறித்த வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைந்திருந்த கட்டட தொகுதியில் குறித்த அலுவலகம் இன்று விவசாய அமைசசர் மகின்த அமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. 

குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது, இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகின்த அமரவீர, பிரதி அமைச்சர்களான அங்கயன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உத்தியோகபூர்வ ஏட்டில் பதிவு செய்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

குறிதத் காப்புறுதி அலுவலகம் பிரதி அமைச்சர் அங்கயனின் வேண்டுகையின் பெயரில் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. விவசாய செய்கை தொடர்பில்  ஜனாதிபதி எண்ணத்திற்கமைய மானிய உரத்துடன் விவசாய காப்புறுதியை வழங்கப்படவுள்ளது. 

அதற்கமைய இதுவரை தெரிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்திகளுடன் மிளகாய், வெங்காயம், சோயா உள்ளிட்ட மேலும் பல விவசாய உற்பத்திகளிற்கு இலவச காப்புறுதி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இது போன்று நாம் வடக்கில் பல விவசாய வலயங்களை உருவாக்குகின்றோம். கயூ, கச்சான், உழுந்து என பல்வேறு வலயங்களை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்த உள்ளாம். அதற்காக குறித்த வேலைத்திட்டத்தை தற்போது அறிமுகம் செய்வதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் குறிப்பிடுகையில்,

எனது வேண்டுகைக்கமைய விவசாயிகளின் நலனிற்காக இந்த காப்புறுதி அலுவலகத்தினை இன்று கிளிநொச்சியில் திறந்து வைத்துள்ளார். 

அந்த வகையில் கிளிநாச்சி விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளை அச்சமின்றி தொடர முடியும். இதுவரை 6 விவசாய உற்பத்திகளிற்கே காப்புறுதி வழங்கப்பட்டது. தற்போது அரசாங்கத்தினால் மேலும் மிளகாய், வெங்காயம், சோளன், கச்சான், சோயா உள்ளிட்ட மேலும் காப்புறுதிகள் வழங்கப்படவுள்ளன எனவும்அவர் இதன்போது குறிப்பிட்டார். 

குறித்த அலுவலகத்தில் விவசாயிகள் தமது விவசாய உற்பத்திக்கான இலவச காப்புறுதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55