கிரிக்கெட் ரசி­கர்கள் ஆவ­லுடன் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருந்த இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டிகள் இன்று இந்­தி­யாவின் நாக்­பூரில் இந்­தி­ய-­நி­யூ­ஸி­லாந்து போட்­டி­யுடன் தொடங்­கு­கின்றன.

இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘சுப்பர் – 10’ சுற்றில் விளை­யாடும் 10 அணி­களும் இரண்டு பிரி­வு­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. ‘குரூப் 1’ பிரிவில் நடப்பு சம்­பியன் இலங்கை, முன்னாள் சம்­பி­யன்­க­ளான மேற்­கிந்­தியத் தீவுகள், இங்­கி­லாந்து மற்றும் தென்­னா­பி­ரிக்கா, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய அணி­களும், ‘குரூப் – 2’ பிரிவில் முன்னாள் சம்­பி­யன்­க­ளான இந்­தியா, பாகிஸ்தான் மற்றும் அவுஸ்­தி­ரே­லியா, நியூ­ஸி­லாந்து, பங்­க­ளாதேஷ் ஆகிய அணி­களும் இடம்­பெற்­றுள்­ளன.

ஒவ்­வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணி­க­ளுடன் தலா ஒரு­முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்­ளிகள் அடிப்­ப­டையில் இரண்டு பிரி­வுகளிலும் முதல் 2 இடங்­களை பிடிக்கும் அணிகள் அரை­யி­று­திக்கு முன்­னேறும்.

2007ஆம் ஆண்டு உலக சம்­பியன் பட்டம் வென்ற இந்­திய அணி தனது உச்­ச­க்கட்ட நம்­பிக்­கை­யுடன் உள்­ளது.

ஆனால் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணம் மற்றும் ஐ.சி.சி. இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் ஆகி­ய­வற்றை வென்ற இந்­திய அணி­யிடம் தோல்­வி­ய­டை­யாத ஒரே டெஸ்ட் விளை­யாடும் அணி உள்­ள­தென்றால் அது நியூ­ஸி­லாந்து அணி மட்­டும்தான்.

முதல் இரு­ப­துக்கு 20 உலக் கிண்­ணத்தில் தோனி தலை­மையில் இந்­திய அணி கள­மி­றங்­கி­யது. ஆனால் அப்­போது கிண்­ணத்தை இந்­தியா வெல்லும் என்று ஒரு­வரும் நினைத்துப் பார்க்­க­வில்லை.

2010ஆம் ஆண்­டிலும் இங்­கி­லாந்து வெல்லும் என்று ஒரு­வரும் எதிர்­பார்க்­க­வில்லை. அதே­போல்தான் மே.இ.தீவுகள், இலங்கை ஆகிய அணிகள் வென்ற போதும் ஒரு­வரும் எதிர்­பார்க்­க­வில்லை, எனவே இந்த இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் வடிவம் ஓரிரு பந்­து­களில் அணியின் அதிர்ஷ்­டங்­களை மாற்­ற­வல்­லது.

அந்த வகையில் இந்த உலகக் கிண்­ணமும் அனைத்து அணி­க­ளுக்­குமே வாய்ப்பு உள்ள ஒரு திறந்த இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்தான். எனவே இந்த உல­கக்­கோப்பை தொடர் முழுதும் சுவா­ரஸ்யம் மிகுந்த திருப்­பங்­களைக் கொண்­டி­ருக்கும் என்­பதில் ஐய­மில்லை.

இலங்கை அணி ஒரு­கா­லத்தில் வெற்றி தோல்­வியைக் கண்டு அஞ்­சாமல் ஆக்­ரோ­ஷ­மாக ஆடி உலக அணி­களை அச்­சு­றுத்­திய வழியில் தற்­போது நியூ­ஸி­லாந்து ஆடி வரு­கி­றது. இத்­த­கைய மன­நிலை கொண்ட அணியை வீழ்த்­து­வது கடி­னமே. ஆனால் இந்த மன­நி­லையே அந்த அணிக்கு நெருக்­க­டி­யையும் ஏற்­ப­டுத்­த­வல்­லது.

சுப்பர் – 10 சுற்றின் முதல் போட்­டியில் இந்­திய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோது­கின்­றன. மராட்­டிய மாநிலம் நாக்­பூரில் இந்தப் போட்டி நடக்­கி­றது. நியூ­சி­லாந்து அணியைப் பொறுத்­த­வரை இந்­தி­யா­வுக்கு எல்லா வகை­யிலும் சவால் விடுத்து விளை­யாடக் கூடி­யது. அணித் தலைவர் வில்­லி­யம்சன், குப்தில், கோலின் முன்ரோ, ரோஸ் டெய்லர், சௌதி, நாதன் மெக்­கலம் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர். நாளைய போட்டி நடைபெறும் நாக்பூர் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்று ஆடுகள அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இரு அணிகளும் ஓட்டங்களைக் குவிக்கும். இதனால் ரசிகர்களுக்கு இந்த ஆட்டம் நல்ல விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.