வில்பத்துவில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை - ரிஷாத்

Published By: Vishnu

05 Oct, 2018 | 03:58 PM
image

வில்பத்துவ வனப் பகுதியை அழிப்பதாக என் மீது தொடர்ச்சியான அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன்,  வில்பத்து காட்டில் ஓரங்குல நிலமேனும் அழிக்கப்படவோ அபகரிக்கப்படவோ இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று மன்னார் நகர சபை மைதானத்தில் இன்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்ட வனரோப தேசிய  நிகழ்ச்சி திட்டமும் சுற்றாடல் மாநடும் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 

மன்னார் மாவட்டத்திலிருந்து வாழ்ந்து வெளியேற்றப்பட்டு 25 வருடங்களுக்கு மேலாக வேறு மாவட்டங்களில் வாழ்ந்த இந்தப் பிரதேச மக்களுக்கே மீண்டும் குடியேறுவதற்காகவே அரசாங்கத்தினால் காணித் துண்டுகள் வழங்கப்பட்டன. அதுவும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளடங்கிய விஷேட செயலணி ஒன்றின் மூலமே இவர்களுக்கு சட்டபூர்வமாக காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 

எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்ற பின்னர் ஓரங்குல நிலமேனும் இந்த மக்களுக்கு வழங்கப்படவுமில்லை. 2009 ஆம் ஆண்டு சமாதானம் ஏற்பட்ட பின்னர் இந்த பிரதேசங்களுக்கு குடியேற வந்து காணி இல்லாதவர்களுக்கு உரிய முறைப்படியே காணிகள் வழங்கப்பட்டன. 

அதேபோன்றே மூன்று இலட்சம் தமிழ் மக்கள் மெனிக்பாமில் தஞ்சமடைந்து வாழ்ந்தபோது அவர்களும் தமது இடங்களில் குடியேற்றப்பட்டனர். சரியான நடைமுறைகளின்படியே இவை நடைபெற்றதேயொழிய எதுவுமே சட்டவிரோதமாக இடம்பெறவில்லை.

எனினும் அரசாங்கத்தில் நான் அமைச்சராக இருக்கின்றபடியால், அரசாங்கத்தை கஷ்டத்தில் போடுவதற்காக, வில்பத்தை நான் அழிப்பதாக எனக்கெதிராக மிகவும் மோசமான பிரச்சாரங்களை முன்வைக்கப்பட்டு வருகிறது என்றார்.

அத்துடன் நாட்டின் சூழலை பாதுகாப்பதற்காகவும், வனவளத்தை காப்பாற்றுவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் அமைச்சர்களான மகிந்த அமரவீர, மகிந்த சமரவீர, கயந்த கருணாதிலக, பிரதியமைச்சர்களான காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், ஸ்ரீயானி விஜேவிக்ரம, வீரகுமார திஸ்ஸாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அன்ரன் மோகன்ராஜ் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள், முப்படைகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உட்பட ஏனைய அமைச்சின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19