இந்து சமுத்திர கேந்திர முக்கியத்துவத்தை வலுப்படுத்துவதே நோக்கம் - ஹர்ஷ டி சில்வா

Published By: Vishnu

05 Oct, 2018 | 03:26 PM
image

(நா.தனுஜா)

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எமது நாடு கேந்திர ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனை மேலும் வலுப்படுத்திக்கொள்வதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ள பலம்வாய்ந்த நாடுகள் கடற்பிராந்திய அடிப்படையில் பிற நாடுகளை ஆக்கிரமிக்காதவாறு அனைத்து இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையிலும் கலந்துரையாடல் மூலமான புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இந்து சமுத்திரம் - எமது எதிர்காலத்தை வரையறுத்தல் எனும் தொனிப்பொருளில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளடங்கலாக பல்வேறு இந்துசமுத்திரப் பிராந்திய நாடுகள் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச மாநாடு எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளது. 

இம்மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது நாடு ஏனைய நாடுகளுடன் நல்லுறவினைப் பேணிவருகின்றது. இவ்வாறானதொரு நிலையில் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையில் மாநாடொன்றினை ஏற்பாடு செய்வதன் மூலம் அனைத்து நாடுகளின் வருகையினையும் உறுதிப்படுத்த முடியும். அனைத்து நாடுகளுக்குமான தலைமைத்துவத்தினை வழங்கி, ஆரோக்கியமானதொரு கலந்துரையாடல் மூலம் பிராந்திய ஒத்துழைப்பினையும், புரிந்துணர்வினையும் வலுப்படுத்திக் கொள்வதுடன், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எமது நாட்டை பொருளாதார கேந்திர நிலையமாக கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11