மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித் திட்டம் 

Published By: Daya

05 Oct, 2018 | 03:25 PM
image

நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றது.

மன்னார் -மதவாச்சி பிரதான வீதியில் உள்ள தம்பனைக்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் 'வனரோபா' தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நடை முறைப்படுத்தப்பட்டது.

இதன் போது பாடசாலை மாணவர்கள், திணைக்கள பணியாளர்களை இணைத்து மரக்கன்றுகள் நட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுற்றாடல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை விளையாட்டரங்கில் இடம் பெற்றது.

இலங்கையின் வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் நோக்குடன் சுற்றாடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எண்ணக்கருவின் அடிப்படையில் 'வனரோபா' தேசிய மர நடுகை நிகழ்ச்சித்திட்டம் நடை முறைப்படுத்தப்படுவதுடன்,  ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் தேசிய மர நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் கீழ் அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இவ்வருடமும் ஒக்டோபர் 01 முதல் 31 ஆம் திகதி வரை இந்த நிகழ்ச்சித்திட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மன்னாரில் இடம் பெற்ற குறித்த நிகழ்வுகளில் அமைச்சர்களான  றிஸாட் பதியுதீன், வீர குமார, பிரதி அமைச்சர்களாக காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மாகாண சபை உறுப்பினர்கள்,  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி  மன்றங்களின் பிரதி நிதிகள் , உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது வருகை தந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 09:50:53
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17