அம்பாந்தோட்டையை சீனா இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்த முடியாது- இலங்கை தூதுவர்

Published By: Rajeeban

05 Oct, 2018 | 02:25 PM
image

அம்பாந்தோட்டை துறைமுகம்  ஒரு கடன்பொறியில்லை என தெரிவித்துள்ள சீனாவிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு சீனா இராணுவ நோக்கங்களிற்காக  துறைமுகத்தை பயன்படுத்த  முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை கடன்பொறிக்குள் சிக்கவைப்பதற்காகவே சீனா நிதியுதவி செய்தது என யாராவது தெரிவிப்பார்கள் என்றால் அது தவறான விடயம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு இலங்கை சிரமப்பட்டது உண்மை என தெரிவித்துள்ள தூதுவர் இலங்கை துறைமுகத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு சீனா உதவியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தை தங்களிடம் கையளிக்குமாறு சீனா அரசாங்கம் எங்களை ஒரு போதும் கேட்கவில்லை இலங்கையே அவ்வாறான யோசனையை முன்வைத்தது எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையை பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்து இது பொருளாதார ரீதியான முயற்சியே என  சீனாவிற்கு தெரிவித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் உள்விவகாரங்களில் எவரையும் தலையிட அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தினதும் இந்து சமுத்திரத்தினது பாதுகாப்பும் இலங்கை படையினரிற்கு முக்கியமான விடயம் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04