துப்பாக்கி முனையில் யுவதி கடத்தல் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!!

Published By: Digital Desk 7

04 Oct, 2018 | 02:40 PM
image

அம்பலாந்தோட்டை– வலவ்வத்த, மாமடல பிரதேசத்தில் கடந்த 2ஆம் திகதி 17 வயது யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீட்டிற்கு வந்த அறுவர் அடங்கிய குழு துப்பாக்கி மற்றும் பல ஆயதங்களை காட்டி தமது மகளை கடத்திச் சென்றதாக குறித்த யுவதியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை நடாத்திய பொலிஸாருக்கு குறித்த யுவதியை கடத்தியது யுவதியின் காதலரும் அவரதும் நண்பர்களும் என தெரிய வந்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது திஸ்ஸமஹாராம – வீரவில பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து குறித்த யுவதியையும், காதலரையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இருவரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலிருந்து,

குறித்த யுவதி பல வருடங்களாக இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலிற்கு யுவதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் தமது காதலிற்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் தனது காதலருடன் வீட்டை விட்டு ஓடுவதற்கு யுவதி காதலருடன் இனைந்து திட்டம் தீட்டியுள்ளார்.

திட்டத்திற்கமைய சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு வெளியேற யுவதி கதவை திறக்க முயற்சித்த வேளையில் பெற்றோர் தடுத்துள்ளனர்.

அவ் வேளையில் யுவதியின் காதலன் வீட்டு கதவை உடைக்க முயற்சித்த வேளையில் கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியுள்ளது. என பொலிஸாரின் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

யுவதியை கடத்திச் சென்ற இளைஞனுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் யுவதியை வைத்திய பரிசோதனைக்கு உடபடுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுவதி கடத்தல் சம்பவத்தில் காதலனின் நண்பர்கள் இன்றைய நாளுக்;குள் பொலிஸில் ஆஜராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04